பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் Jeffersonville, Indiana, USA 54-1219E 1இன்று இந்த மத்தியான வேளையிலே ஒரு அடக்க ஆராதனை நடைபெற்றது. நாளை காலையிலும் மற்றொரு அடக்க ஆராதனை இருக்கிறது. ஆகையால் 'இப்பொழுது சீக்கிரமாய் சபைக்குச் சென்றுவிடுவோம். அப்பொழுது நாம் எந்த ஆராதனையையும் தவறவிட மாட்டோம்'' என்று கூறினேன். ஆனால் 'நீங்கள் வந்து இங்கு சற்று பேசுங்கள்“ என்று சகோதரன் நெவில் கூறுவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை மறுபடியும் வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நம்மெல்லார் மேலும், மற்றும் இந்த சகோதரர் மேலும், மேய்ப்பனின் மேலும் வைத்திருக்கும் அன்பிற்காகவும்; இரக்கத்திற்காகவும் மற்றும் கிருபைக்காகவும் சந்தோஷப்படுகிறேன். 2உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் நெவில் மற்றெல்லா ஊழியர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவர். ஒரு பிரசங்கி தன்னுடைய பிரசங்கப்பீடத்தை விட்டுக்கொடுப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. அது என்னவென்று உங்களால் உணர முடியாது. ஆனால் நான் எப்பொழுதெல்லாம் வருகிறேனோ அப்பொழுதெல்லாம் சகோதரன் நெவில் அன்போடும், கரிசனையோடும் தன்னுடைய பிரசங்கப்பீடத்தை எனக்கு கொடுப்பார். அவர் என்னிடம் 'சகோதரன் பில்'' நீங்கள் பிரசங்கிக்கிறீர்களா என்று வெறுமனே கேட்பது மட்டுமில்லாமல் அதற்காக வருவதற்கு என்னை உந்தித்தள்ளவும் செய்துவிடுவார். அவர் அப்படி செய்வது நம்மை இன்னும் அதிகமாய் வரவேற்று ஏற்றுக்கொள்வது போன்றிருக்கிறது. நான் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அப்படிப்பட்ட எந்தவொரு நபரிடமும் நீங்கள் இல்லை என்று சொல்லவே முடியாது. அவர்கள் அவ்விதமாக மிகவும் அருமையாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள். 3அவருடைய சிறு குழந்தை சுகவீனப்பட்டு வாந்தி எடுக்கிறது என்று அவர் சொன்னார். அதேபோல சற்று நேரத்திற்கு முன் சகோதரன் ஜூனியர் அவர்கள் குழந்தையும் இருமிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். சகோதரன் ஜூனியர் அவர்களே‚ உங்கள் குழந்தைதானே இருமிக் கொண்டிருந்தது? இப்பொழுதும் இங்கு அநேகருக்கு சளியும் மற்ற காரியங்களும் இருக்கிறது. வியாதியஸ்தருக்கான ஜெபம் இன்னும் சற்று நேரத்தில் துவங்கும். 4காலையில் அப்போஸ்தலர் நடபடிகள் 4ஆம் அதிகாரத்தில் நான் விட்ட அந்த இடத்திலிருந்து மீண்டும் துவங்கப் போகிறேன். அங்கே அந்த 4ஆம் அதிகாரம் 10ஆம் வசனத்தில் அப்போஸ்தலர்களின் செயல்கள் பற்றி அல்லது அப்போஸ்தலர்களுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். புரிகிறதா? நாம் அதை எப்பொழுதும் 'அப்போஸ்தலர் நடபடிகள்'' என்றே கூறுகிறோம். அவ்வாறே நம்பவும் செய்கிறோம். ஆனால் அது அப்போஸ்தலர்களின் செயல்கள் அல்ல. பாருங்கள், அது அந்த அப்போஸ்தலர்களுக்குள்ளாக இருந்த பரிசுத்த ஆவியானவரின் செயல்கள். அந்த நபர்கள் எல்லோரும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களால் தாமாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. நான் தொடர்ந்து செல்வதற்கு முன்பதாக... 5சற்று நேரத்திற்கு முன்பதாக நான் சகோதரன் உட் அவர்களுடன் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட சிறு நபர், அவர் சபைக்கு அதிக காலமாக வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு தன்னுடைய நிலையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் சொல்வதை அவர் செய்வாரானால் நான் அதை சொல்வேன். நீங்கள் பாடகராக வேண்டும். சகோதரன் டெம்பிள் உங்களால் வெவ்வேறான காரியங்களை செய்யக் கூடும். ஆனாலும், நீர் ஓர் அருமையான பாடகர். நான் அதை நிச்சயமாக பாராட்டுகிறேன். நீங்கள் மட்டும் உங்களை ஒப்படைத்து பாடுவீர்களானால் தேவன் உங்களை நிச்சயமாகவே உபயோகிப்பார். நீங்கள் சரியான காரியத்தை தவிர வேறு அநேகக் காரியங்களையெல்லாம் செய்கிறீர்கள். பாட ஆரம்பியுங்கள். அதுதான் உங்களுடைய தாலந்து. நீங்கள் அதை நிச்சயமாக உபயோகப்படுத்த வேண்டும். எனக்கு அந்த பண்டையக் கால பாடும் முறை பிடிக்கும். உங்களுக்கும் அப்படிதானே? (சபையார் ஆமாம் என்கிறார்கள்) ஆம் ஐயா சகோதரன் நெவில் அவர்களே‚ எனக்கு பண்டைய காலத்தில் பாடுவது போல பாடுவது நிச்சயமாகவே பிடிக்கும். 6சகோதரன் நெவிலின் பிரசங்கமும் மற்றும் எல்லா காரியமும் எனக்குப் பிடிக்கும். அந்தபடியாக, அவரும் அவருடைய மனைவியுமாக வானொலியில் பாடும் அந்த பண்டைய காலத்து முறைமையிலான பாடல்களையும் கூட நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு அதை கேட்டிராதவர்கள் அநேகர் இருப்பீர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒலிப்பரப்பாகும் அந்த நிகழ்ச்சியை கேட்டுப் பாருங்கள். நிச்சயமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். என் மனைவியும் பிள்ளைகளும் ஏதோ நானே அந்த நிகழ்ச்சியில் வருவது போல அனைவரும் அந்த நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்திருப்பார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவரும் அதை விரும்புவார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருப்போம். அதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறோம். 7இந்த காலை வேளையிலே ஒரு காரியம் நிகழ்ந்தது. அதில் இருந்து நான் இன்னும் மீழவில்லை. அது அந்த குழந்தையைக் குறித்தது. அதனால் எனக்கு ஏற்பட்ட மிகவும் விநோதமான உணர்வை குறித்து நான் இன்னும் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறேன். அப்படியாக நான் காலையில் எழுந்தவுடன் என் மனைவியைப் பார்த்து, 'தேனே, நான் கண்டது தரிசனமா அல்லது கனவா என்று எனக்குத் தெரியவில்லை'' என்றேன். 'நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கலாம், ஆகையால் அதை தரிசனம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அது மிகவும் தத்ரூபமாகவே இருந்தது. அது முடிவடையும் போதும் அந்த அறையில்தான் நான் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். நான் எழும்பின போது, 'அந்த தரிசனம் எனக்கு எப்பொழுது உண்டானது என்று எனக்குத் தெரியவில்லை'' என்றேன். ஆனால் நான் இங்கு வந்தபோது காரியங்கள் எல்லாம் நான் பார்த்த விதமாகவே நகருவதைப் பார்த்தேன். அப்பொழுது சில நாட்களுக்கு முன்பதாக சகோதரி காக்ஸ் அவர்களை அழைத்து அதே விதானத்தில் உள்ள ஒரு குழந்தையைப் பற்றி கூறினேன். அது அந்த குழந்தையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த சிறு குழந்தையின் கண்களை புற்று நோய் அரித்துப் போட்டிருந்தது. அதன் சிறு கண்கள் முற்றிலுமாக அரிக்கப்பட்டு வெறும் கண்குழி மட்டும் இருந்தது. இப்பொழுது அது மற்றொரு கண்ணுக்கும் பரவிவிட்டது. அந்த குழந்தையோ ஜீவனற்று கிடந்தது. அப்பொழுது லூயிவில்லில் உள்ள மிக பிரசித்தி பெற்ற ஒரு அறுவை சிகிச்சை நிபுனர் அந்த குழந்தையின் தாயிடம் அந்த குழந்தையை ஜெபிப்பதற்காக இங்கே என்னிடம் கொண்டுச் செல்லுமாறு கூறினார். ஆகையால்... தேவன் அந்த குழந்தையின் நிமித்தமாக எனக்கு தரிசனத்தை தந்தார் என்று விசுவாசிக்கிறேன். அந்தப்படியே இந்த பிரசங்கப் பீடத்தில் இன்றைக்கு நான் நின்றுக் கொண்டிருக்கிறேன் என்று எவ்வளவாக விசுவாசிக்கிறேனோ அந்த அளவிற்கு அந்த குழந்தையும் சுகமாயிற்று என்று விசுவாசிக்கிறேன். சகோதரன் காக்ஸ்‚ இது போன்ற விஷயங்களில் நான் அதிகமாக ஈடுபடுவதில்லை என்பதை அறிந்திருக்கிறேன். 8சகோதரன் ஜார்ஜ் ரைட்டோடு ஒரு முறை ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. அவ்வேளையில் அது என்னவென்று என்னால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது சகோதரன் மெக்டோவெல் சார்லி அவர்களின் தாயாரை காண்பதற்காகவோ அல்லது வேறு ஏதோ காரியத்திற்காகவோ என்னை அழைத்திருந்தார். அந்த தாயார் கிட்டத்தட்ட உயிர் பிரிந்த நிலையில் மருத்துவமனையில் படுத்திருந்தார். ஆகவே சகோதரன் மெக்டோவெல் அவர்களும் நான் சென்று அந்த தாயாரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். நான் அந்த குழந்தையை பார்ப்பதற்காகச் சென்றேன். சகோதரன் ஜார்ஜ் அவர்களை நான்கு நாட்கள் சென்று சந்தித்தேன். நான் அவரை முழு இருதயத்தோடு நேசிக்கிறேன். ஆனாலும் அவர் கடந்து செல்கிறார் என்று நிச்சயமாகவே நம்பினேன். அது சரிதான். நான் அவர் மரிக்கிறார் என்றே நினைத்தேன். மருத்துவர்களும், 'அவருக்கு வாய்ப்பு மிகக் குறைவு“ என்றே கூறினர். இருதயத்திற்கு போகின்ற வழியில் இரத்த உறைவு கட்டிகள் ஏற்பட்டிருந்தபடியால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. நம்முடைய சகோதரி திருமதி ரைட் இங்கு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் காரியத்தை குறித்து விசாரித்தார். நானும் நான்கு நாட்கள் அவருக்காக ஜெபித்த பின்னர், 'அவர் கடந்து செல்கிறார் என்று நினைக்கிறேன்'' என்றேன். சிறு பிள்ளையான ஈடித்தும் என்னிடம் அது பற்றி கேட்டாள். நானோ அவளிடம் ஒன்றுமே சொல்லவில்லை. நான் கூறினேன், 'ஓ''... ஆனால் அவளோ இன்னுமாக தன்னுடைய விசுவாசத்தை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் நம்பினாள். அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்…. சகோதரன் ஷெல்பி இதோ பின்னால் உட்கார்ந்திருக்கிறார். அவர் என்னுடன் கூடப் பிறந்த சகோதரன் போன்றவர். அவர் என்னை அங்கே சந்தித்து, 'அப்பாவின் நிலைமையைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்'', என்று கேட்டார். அதற்கு நான், 'ஷெல்பி, அவர் நிச்சயமாய் நம்மைவிட்டு கடந்து செல்கிறார் என்றே நினைக்கிறேன்'' என்று கூறினேன். 'அவருக்கோ எழுபத்தி மூன்று வயது ஆகிறது ஆனால் தேவன் அவருக்கு எழுபது வருடம் மட்டும் தானே வாக்களித்தார். கொடுத்த நேரத்தை முழுவதுமாக அவர் வாழ்ந்துவிட்டார். ஆகையால் அவர் கடந்து செல்கிறார் என்று நான் நம்புகிறேன்'' என்றேன். 9அன்று இரவு நான் என் வீட்டிற்கு சென்ற போது, சகோதரன் மெக் அந்த வயதான தாயை சந்திக்க வேண்டும் என்று என்னை மிகவும் வற்புறுத்தினார். ஆகவே சார்லி என்னை அங்கே அழைத்து சென்றார். அவர் அங்கே கிட்டதட்ட அதிகாலை வரை இருந்தார். நான் சென்று அந்த ஸ்திரீக்காக ஜெபித்தேன். அது மட்டும்தான் என்னால் முடிந்தது. பிறகு நான் என் வீட்டிற்கு சென்று என் அறையில் உறங்குவதற்காக என் உடைகளை கழற்றி விட்டு ஆயத்தமானேன். அப்பொழுது யாரோ பேசிக் கொண்டிருப்பது போல கேட்டது. நான் சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பார்த்தேன். அங்கே நரைத்த முடியுடன் கூடிய ஒரு வயதான பெண் நின்றுகொண்டிருந்தார். அவர் சமையலறையில் நின்றுகொண்டு யாரோடோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அது அந்த வாலிபனின் தாய். அது சரிதான். அப்பொழுது நான்…. அதன் பிறகு நான் சகோதரன் ஜார்ஜ் அவர்களின் வீட்டின் அருகாமையில் உள்ள பழைய வில்லோ மரம் (Willow Tree) நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். பார்ப்பதற்கு களி மண்ணோ அல்லது அழுக்கோ போன்ற உருண்டைகள் விழுவதைப் பார்த்தேன். அவர் அதை, ''கல்லரை'' என்று கூறினார். 'அவரை பார்த்து எள்ளி நகையாடும் அநேகர் அவர் மரிப்பதற்கு முன்பாக அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்று கல்லரையைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தைக் கூறினார். ஆனால் அது என்ன காரியம் என்று என்னால் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே நான் உடனடியாக சகோதரி ரைட் அவர்களை அழைத்து (அது சகோதரி ரைட் என்றுதான் நினைக்கிறேன்) அந்த தரிசனத்தைப் பற்றியும், அதன் அர்த்தம் சரியாக இப்பொழுது தெரியவில்லை என்றும் கூறினேன். அந்தபடியே சார்லியின் தாயார் தன்னுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே தரிசனத்தில் பார்த்தபடியே அந்த தொலைபேசியில் பேசினார். அவர்கள் இப்பொழுது கடந்து சென்றுவிட்டார் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர்கள் அந்த இரவை கடக்கமாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையிலும், தரிசனத்தில் பார்த்தபடியே அவர்கள் வீட்டிற்க்குச் சென்றார். அது தேவன் நம்முடைய ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார் என்பதை அவர் நமக்கு தெரியப்படுத்தும் ஒரு விதானமாக இருக்கிறது. 10அன்றொரு நாளிலே யாரோ ஒருவர், ஒரு புத்தகத்தை எழுதினவர், என்னிடம், 'விரைவீக்கத்திலிருந்து சுகமான ஒருவர் மீண்டும் ஒரு வருடம் கழித்து சுகவீனப்பட்டார்'' என்று கூறினார். அப்படி நிச்சயமாக நடக்க சாத்தியம் உண்டு. நீங்கள் இன்றிரவு சுகமடைந்து அதே நோயினால் மீண்டும் நாளை காலையிலே சுகவீனமடைய முடியும். நீங்கள் இன்றிரவு பாவியாக இருக்கலாம் ஆனால்... இன்றிரவு பாவியாக இருந்து நாளை காலையிலே கிறிஸ்தவனாக முடியும். அதேபோல இன்றிரவு கிறிஸ்தவனாக இருந்து நாளை காலையிலே பாவியாகவும் முடியும். அது நிச்சயமான சாத்தியம். மருத்துவரிடமிருந்து பென்ஸிலின் மருந்து பெற்று ஒரு மோசமான சளிப் பிரச்சனையிலிருந்தோ அல்லது நிமோனியா (Pneumonia) நோயிலிருந்தோ உடனடியாக சுகமடைய முடியும். அவரை மீண்டும் சோதித்துப் பார்த்தால் அவர் முற்றிலுமாக சுகமடைந்திருப்பார். அவருக்கு கொஞ்சம் கூட நிமோனியாவோ காய்ச்சலோ இருக்காது. ஆனால் நாளை காலையிலேயே அவர் நிமோனியாவினாலேயே மரிக்க கூடும். அது சரிதானே? அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, 'கொசுவை வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறார்கள்'', என்ற அந்தப் பழைய கூற்றின்படியே இருக்கிறது. 11எப்படியிருந்தாலும் சரி, எனக்கு மீண்டுமாக தரிசனம் உண்டாகி அதிலே சகோதரன் ரைட் அவர்கள் அங்கே பின்னாடி உட்கார்ந்திருப்பதையும் நான் அந்த கதவின் வழியாக உள்ளே வருவதையும், பிறகு அவர் அப்படியே இந்த வழியாக நடந்து வந்து இங்கே என் கைகளை குலுக்கினதையும் கண்டேன் என்று திரும்பி வந்து சகோதரி ரைட் அவர்களிடம் கூறினேன். அவராலோ நடக்க முடியாது என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். இரத்த உறைவு ஏற்பட்டதினால் அவருடைய கால்கள் அப்படியாக ஆகிவிட்டது. 'அது அவர் இருதயத்திற்கு செல்கின்றபடியால் அவர் எந்த நிமிடமும் மரிக்கக் கூடும்“ என்று மருத்துவர் கூறினார். ஆகையால் எழுபத்தி மூன்று வயதாகின்ற அவர் பிழைப்பதற்கு இந்த பூமியில் சாத்தியக்கூறுகள் குறைவு. 12பிறகு நான் சபைக்கு வந்து சகோதரி ரைட் அவர்களை அழைத்து கூறினேன். அது மட்டுமல்லாமல் நான் அவர் வீட்டிற்கும் கடந்து சென்றேன். அன்று காலையிலே இரண்டு நபர்கள் அவர் வீட்டில் அமர்ந்திருந்தார்கள் என்று நம்புகிறேன். சகோதரன் ஜார்ஜ் அது சரிதானே? நான் அன்று காலை வந்த போது இரண்டு நபர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் அண்டை வீட்டுக்காரர்; மற்றொருவர் ஒரு பெரிய நபர். 'ஓ என்ன?'' என்று நான் சொன்னேன். ('நீங்கள் அவர்களிடம் பேசியிருக்க வேண்டும். எனக்கு அது ஞாபகம் இல்லை'' என்று சகோதரன் ஜார்ஜ் ரைட் கூறுகிறார்) நான் நினைக்கிறேன்… அது சரிதானே, ஈடித்? ஆமாம், அங்கே இரண்டு பேர் இருந்தார்கள். ஆமாம், அவரும் மிக மோசமான நிலையில் இருந்தார். ''நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம் ஏனென்றால் சகோதரன் ரைட் மீண்டுமாக சபைக்கு நடந்து வரப்போகிறார். இது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொன்னேன். நான் இதில் சற்று குழப்பமடைந்துவிட்டேன். 'கல்லரையை குறித்து ஏதோ ஒன்று இருக்கிறது'' என்று கூறினேன். அது என்னவென்று அந்த தரிசனம் தெளிவடையும் போது எனக்கு புரிந்தது. அவர் இருந்த சபையை விட்டு அவர் வெளியே வரும்போது அவரைப் பார்த்து சிலர் கேலியாக சிரித்தனர். அவர்களோ தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கவில்லை. அவர்கள் முன்னதாகவே மரித்து அடக்கம் செய்யப்படுவதை இவர் காண்பார் என்பதை அறிந்திருந்தார். இப்பொழுது இன்னும் எத்தனை பேர் மீதம் இருக்கிறார்கள்? ('நான் சுகமானதிலிருந்து நான்கு அல்லது ஐந்து பேர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டாயிற்று. என்னை சபையிலிருந்து வெளியே அனுப்பின அந்த பிரசங்கியாரும் இரண்டு வாரத்திற்கு முன்னாகதான் மரித்தார்“ என்று சகோதரன் ஜார்ஜ் ரைட் கூறுகிறார்). தேவன் சரியாக சொன்னாரா? நிச்சயமாக. நான் நம்புகிறேன். நான்கு பேர் முடிந்தார்கள், சீக்கிரம் அது ஐந்தாக மாறும். ஐந்து பேர் கடந்து சென்றாயிற்று. இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை, இல்லையா சகோதரன் ஜார்ஜ்? ('கிட்டதட்ட ஒரு வருடம்” என்கிறார்) கிட்டதட்ட ஒரு வருடமாகிறது இந்த நேரத்தில். அது சரிதான். தேவன் பேசும் போது அது பரிபூரணமாக இருக்கும். நீங்கள் அதை கச்சிதமாக பார்க்க முடியும். ஒன்றாகிலும் நடக்காமல் போனதை நான் கண்டதில்லை. என்னவானாலும் சரி... 13நமது அருமையான மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சையை எல்லாம் அளித்தார்கள். எனக்கு அது நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்று ஓரளவிற்கு நினைக்கிறேன். ஏனென்றால் உதடுகளில் ஒப்பனை (makeup)யோடு நின்ற அந்த பெண்ணை நான் பார்த்தேன். அது சரியாக என் மனைவியின் அடக்க ஆராதனை செய்யப்பட்ட அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தது. அந்த குழந்தையோ அன்றைக்கு என் குழந்தை சாராள் எப்படி இருந்தாளோ அதேபோல இருந்தது. ஆகையால் அந்த குழந்தையானது மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக வந்ததை நான் கண்டேன். அந்த குழந்தைதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப்படியென்றால் இந்த உலகத்தில் எந்த ஒரு காரியமும் அதை தடை செய்ய முடியாது. புரிகிறதா? பரத்திலே தேவன் இருக்கிறது போலவும், அவருடைய வார்த்தைகள் உண்மையானது போலவும், அந்த குழந்தையும் உயிரோடு வாழும். ஆம் ஐயா‚ நான் அதை நிச்சயமாக என் முழு இருதயத்தோடு நம்புகிறேன். ஆகையால் நாம் சற்று பொறுமையோடு காத்திருப்போம். தேவன் அற்புதமானவர், இல்லையா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர்.) தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார். 14இப்பொழுது இன்று காலையில் சபையானது எப்படியாக தேவனின் மகிமையோடு சேர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தது என்பதை அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் பார்த்தோம். கர்த்தராகிய இயேசு தாம் தேவனுடைய குமாரன் என்பதற்கு சாட்சியாக பூமிக்கு எப்படியாக வந்தார் என்றும், அவர்கள் அவர் மீது எவ்வளவாக நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்றும், மாம்ச சரீரத்தில் இருக்கும் போது ஒரே ஒரு சரீரத்தில் மட்டுமே இருக்க முடியும் என்றும் எல்லோருக்குள்ளும் இருப்பது கூடாத காரியம் என்பதை எப்படியாக அவர்களுக்குத் தெரிவித்தார் என்பதையும், ஆனாலும் அவர் கடந்து சென்றால் அவர் மீண்டுமாக ஆவியின் வடிவில் அவருக்காக பசியோடும் தாகத்தோடும் காத்திருக்கும் ஒவ்வொரு இருதயத்திலும் வந்து, பூமியில் அவர் செய்த அதே காரியங்களை சபையின் மூலமாக உலகத்தின் கடைசி மட்டும் தொடர்ந்து செய்வார் என்பதையும் நாம் பார்த்தோம். 15இன்றிரவிலே நீங்கள் அந்த சபையிலே இருப்பதற்காக சந்தோஷப்படுகிறீர்களா? நான் இந்த சபையைப் பற்றி பேசவில்லை. ஆனால் சபை என்று கூறுகிறேன். ஒரே ஒரு சபை மட்டும்தான் இருக்கிறது. அதிலே நீங்கள் சேர்ந்திட முடியாது. அப்படியே ஒரு படிவம் நிரப்பியும் அதில் சேர்ந்திட முடியாது. ஆகையால் நீங்கள் அதிலே பிறந்திட மட்டுமே முடியும். அதிலே சேர்ந்திட வேண்டும் என்கின்ற பசியோ வாஞ்சையோ உங்களுக்கு கிடையாது. நீங்கள் அந்த சபையில் இருக்க வேண்டும் என்று தேவனே தீர்மானித்தாலொழிய அப்படிப்பட்டதான எண்ணங்களை நீங்கள் வெறுக்கவே செய்வீர்கள். நீங்கள் அந்த சபையில் இருப்பீர்கள் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே தேவன் அறிந்திருக்கிறார். அதிலே இருப்பீர்களா இல்லையா என்பதையும் அறிவார். அந்தபடியே நீங்கள் அந்த சபையில் இருக்க வேண்டும் என்று தேவன் முன்குறித்து முன்னமே தீர்மானித்தார். அது நிச்சயமாகவே அற்புதமாக இருக்கிறது அல்லவா? 'என்னுடைய சத்தத்தை கேட்பவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வருவார்கள்'', அது சரிதானே? “என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். நான் கடைசி நாளில் அவனை மறுபடியும் எழுப்புவேன்”. 16இப்பொழுதும் மக்கள், 'நான் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நம்புவதில்லை'', என்று கூறுவார்கள். அப்படிப்பட்டோரை நீங்கள் வெறுக்காதீர்கள். அவர்களுக்காகப் பரிதபித்து ஜெபம் செய்யுங்கள். அவர்களை விசுவாசிக்கச் செய்வதற்கு அவர்களில் எதுவும் இல்லை, இருக்கவும் செய்யாது. அவர்களால் அதை இறையியல் நிலையிலிருந்து மட்டும் அதை நம்பி மற்றவற்றை, ''அதெல்லாம் சரிதான், இருக்கட்டும்“ என்பார்கள். தேவன் இருதயத்தில் இருந்தால் மட்டுமே அவர்களால் அதை நிச்சயமாக நம்ப முடியும். அது உங்களுக்கும் அப்படித்தான். புரிகிறதா? 'என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு'' என்று இயேசு கூறினார். அவன் ஒரு சபையில் சேர்ந்ததினாலோ அல்லது ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதினாலோ அல்லது இந்த காரியத்தையோ அந்த காரியத்தையோ செய்ததினாலோ அல்லது அவன் உரக்க சத்தமிட்டதினாலோ அல்ல. சபையில் சேருவது, ஞானஸ்நானம் எடுப்பது, மற்றும் உரக்க கத்துவது போன்ற அந்த காரியம் எல்லாம் சரிதான். ஆனால், 'அவன் விசுவாசத்தினாலேயே நித்திய ஜீவனைப் பெற்றான்'', என்றார். 17இப்பொழுதும் பேதுரு அவர்களை நோக்கி, ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'', என்றான். இத்தனை வருடக்காலமும் அந்த வசனத்தை வாசிக்கும்போது நான் ஒரு விஷயத்தைக் குறித்து யோசித்துக் கொண்டே இருப்பேன். 'தேவனே இதோ ஆண்களும் பெண்களுமாய் பலிபீடத்தண்டை வந்து முழங்காற்படியிட்டு அழுது ஜெபித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் ஒரே வாரத்தில் உலகத்தோடு சென்றுவிடுவதையும் பார்க்கிறேன். உம்முடைய வார்த்தை நிச்சயமாகவே பொய்யானது அல்ல, என்னால் தான் அதைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நான் உம்மோடு தொடர்வேன்; உம்முடைய வார்த்தை என்னிலே நிலைத்திருக்கும் என்று சொன்னீரே'', என்று நினைத்தேன். பின்பு நான் தொடர்ந்து இதைப்பற்றி தேவனிடத்தில் கேட்டுக்கொண்டே இருந்தேன். இப்பொழுதுதான் அது என்ன காரணம் என்று எனக்கு தெரிந்தது. அதை அவர் எனக்கு வெளிப்படுத்தினார். அது அப்பட்டமாக எனக்கு முன்னே இருந்தபொழுதிலும் தேவன் அதை வெளிப்படுத்தும் வரையிலும் அதைப்பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. அது என்னவெனில், ஆதியில் இந்த மக்கள் இப்படியாக இல்லை என்று கண்டேன். 'என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'', என்று இருக்கிறதே. விருப்பப்படுகிறவனாலே அல்ல ஆனாலும் தேவனே அப்படியிருக்க வேண்டும் என்று முன்குறிக்கிறார்... உனக்கு அது வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியே இல்லை. அதில் உன்னுடைய பங்களிப்பு ஒன்றுமே கிடையாது. தேவன் தான் அதை தீர்மானிக்கிறார். 'ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனை கடினப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவனை கடினப்படுத்துகிறார்''. அது சரிதான். நீ யாராக இருந்தாலும் சரி, எப்பேற்பட்ட ஸ்தானத்தில் இருந்தாலும் சரி, ஜனாதிபதியானாலும் அல்லது தெருவில் சுற்றி திரியும் அக்கறையற்றவனானாலும் சரி, அவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 'தேவன் யார் மீது இரக்கம் பாராட்ட வேண்டுமோ அவர்கள் மீது இரக்கம் பாராட்டுகிறார்.'' அந்தப்படியே காலங்களினூடாய் யாரெல்லாம் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே தீர்மானித்துவிட்டார். அவர் தீர்மானித்த யாவரும் அவரிடத்தில் வருவார்கள். ஒருவராகிலும் தொலைந்து போவதில்லை. அவர், 'இங்கே ஒரு சபை இருக்கும், அது கறை திறையற்றதாய் இருக்கும், மற்றும் பிழையற்றதாய் இருக்கும்'', என்று தீர்மானித்திருக்கிறார். 18இப்பொழுதோ காலமானது மாறிக்கொண்டே வருகிறது. இன்று காலையிலே நாம் அந்த மிக தீர்க்கமான பாரம்பரிய போதகர்களைக் குறித்துப் பார்த்தோம். அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களும் நாகரீகமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். பூமியிலேயே மிகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். வேதாகமும் அவர்களைப் பற்றி, 'கறைதிறையற்றவர்கள்'' என்றே கூறிற்று. அவர்களும், 'நாங்கள் இதைத் தொடமாட்டோம், அதையெல்லாம் செய்ய மாட்டோம்“, என்றே கூறுவார்கள். ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள், அது கிருபையல்ல, கிரியையே. நாமோ நாம் செய்யும் கிரியையினாலே இரட்சிக்கப்படுவதில்லை. நான் செய்த ஏதோவொரு காரியம் என்னை இரட்சிக்கவில்லை. கிறிஸ்து செய்த காரியமே என்னை இரட்சித்தது. என்னிடம் ஏது பரிசுத்தம். புரிகிறதா? அது போலவே, 'நான் மது அருந்துவதில்லை, புகையும் பிடிப்பதில்லை, திருடுவதில்லை, பொய் பேசுவது மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்'' என்று சொல்வேனானால் அவையெல்லாம் நானே என் சொந்தமாக செய்கிறது. வேண்டுமானால் நான் தம்பட்டமடித்துக்கொள்ள முடியும். ஆனால் நானாக எந்த ஒரு காரியத்தையும் விட்டுவிடவில்லை. அவர்தான் எனக்குள்ளாக வந்து அதை நீக்கிவிட்டார். நான் செய்ததல்ல எல்லாம் அவராலேயே நடந்தது. புரிகிறதா? ஆகையால் பரிசுத்த ஆவியானவர் உள்ளே வாசம் செய்து தினமும் பெருகுகிறார்;. அப்படியே வளர்ந்து தன்னை மென்மேலும் வல்லமையாக்கிக் கொண்டே மற்ற காரியங்களையும் கவலைகளையும் மற்றும் சோதனைகளையும் வெளியே தள்ளுகிறார். நீங்கள் அவற்றையெல்லாம் மேற்கொள்ளும்போது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய இடத்தை எடுத்துக்கொள்கிறார். ஒரு காரியத்தை நான் உங்களுக்கு சொல்லட்டும். ஏதோ தவறான காரியம் ஒன்று உங்களை மிகவும் சோதனைக்குள்ளாக்குமென்றால் அதை சிலமுறை மேற்கொண்டு பாருங்கள். அதனாலே உங்களுடைய சாட்சியை நீங்கள் பெருகிறீர்களா இல்லையா என்று பாருங்கள். 19இப்பொழுது சிம்சோனை கவனித்து பாருங்கள். சிங்கமானது தன்னை கொல்ல வருகிறதை பார்த்த போது தேவனுடைய வல்லமையானது அவன் மேல் இறங்கினவுடன் வெறும் கையினாலேயே அதன் வாயை இரண்டாக கிழித்து கொன்று போட்டான். பார்ப்பதற்கு பொடியனாகவும் சின்ன பையனாக ஏழு சடைகளை தொங்கவிட்டு ஒரு திடகாத்திரமும் இல்லாதவனாக ஒல்லியாக சுருட்டை முடியோடு சிறிய உருவத்தோடு அந்த தெருவில் நடந்தான். தேவனுடைய ஆவியானவர் அவனுக்குள்ளாக வருமட்டுமாக பெண்தன்மையை கொண்டவனைப் போலவே இருந்தான். அதாவது ஒரு பெரிய திடகாத்திரமான நபர் தன்னுடைய கரத்தினாலேயே சிங்கத்தை கொன்றார் என்று கேட்போமானால் அதை நம்புவதற்கு ஒன்றும் சிரமமாக இருக்காது. அவனால் அதை செய்ய முடியும் என்பதை நிச்சயமாக நம்புவேன். ஆனால் வேடிக்கையான காரியம் என்னவென்றால் அதை இந்த பொடிப்பையன் செய்துவிட்டான். அங்கே தானே கர்த்தருடைய ஆவியானவர் அவன் மீது இறங்கும்போது அவன் அந்த சிங்கத்தை கொன்று ஒரு ஓரமாக தூக்கிப்போட்டான். அதில்தானே தேனீக்கள் கூடு கட்டின. சிம்சோன் அவன் சாப்பிட்டதிலேயே மிகவும் மதுரமான தேன் அவன் கொன்றுபோட்ட சிங்கத்தின் கூட்டிலிருந்துதான் கிடைத்தது. அது சரிதானே? ஏன்? ஏனென்றால், அவன் அதை தேவனுடைய வல்லமையினாலே மேற்கொண்டிருந்தான். 20உங்களிடமும் அந்த சுவையான தேனை ருசிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய ஏதேனும் ஒன்று இருக்கிறதா? அதை தேவனுடைய வல்லமையினாலே செய்யுங்கள். அதன்பிறகு அது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று பாருங்கள். அது சரியே. நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம், விஸ்கி அல்லது பீர் போன்றவற்றின் மணம் வந்தவுடன் அதை குடிக்க வேண்டும் போல இருக்கும். தேவனுடைய வல்லமையினால் அதை ஒருமுறை மேற்கொண்டு பாருங்கள். அவையெல்லாம் மரித்து உங்களை விட்டு நீங்கிப் போகும்போது எப்பேற்பட்ட உணர்வு உங்கள் இருதயத்தில் ஏற்படும் என்று பாருங்கள். ஓ, அந்த மிகவும் மதுரமான தேன் அதிலிருந்துதானே கிடைக்கும். இப்பொழுது, நிச்சயமாகவே மேற்கொண்டிருந்த மக்களெல்லாரும் பெந்தெகோஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். தேவனுடைய வல்லமைகள் அவர்கள் மேலிருந்தது. அந்நிய பாஷையில் பேசுவது போன்று மற்ற வரங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களெல்லோரும் மிகவும் அருமையான நேரத்தைக் கொண்டிருந்தார்கள், சபையானது கொழுந்துவிட்டு எரிந்தது. 21இப்பொழுது என்னுடைய செய்தியின் பொருளை நேரடியாக அணுகுவதற்கு முன் வேறொரு கோணத்தை எடுக்கக் கூடுமானால் ஸ்தேவானின் பார்வையிலிருந்து அதைப் பார்ப்போம். கவனியுங்கள், ஸ்தேவான் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் அப்போஸ்தலர்களில் ஒருவனல்ல. இல்லை ஐயா; இல்லை. அவன் ஒரு சாதாரணமான மூப்பன் (Deacon). ஆனாலும் சகோதரனே அவனுடைய இருதயத்தில் ஏதோ ஒன்று இருந்ததினாலே அவனால் (அமைதியாக) இருக்க முடியவில்லை. அதை இருதயத்தில் பெற்ற ஒவ்வொரு மனிதனுடைய நிலையும் அப்படிதான் இருக்கும். அவனால் அமைதியாக இருக்க முடியாது, அதை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும். அங்கேதானே அவர்கள் தெருக்களில் நின்று எழுப்புதல் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அது மிகவும் மகத்தான ஒரு நேரமாய் அவர்களுக்கு இருந்தது. அதையெல்லாம் பார்ப்பதற்கு பலத்த காற்று வீசும்போது கொழுந்துவிட்டு எரிகின்ற வீட்டைப் போலிருந்தது. ஆகையால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியாது. அவ்வளவுதான். அந்தப்படியே அவனை அவர்கள் அந்த தெருவிலிருக்கும்போதே பிடித்துக்கொண்டு போய் ஆலோசனை சங்கத்தில் விட்டனர். அவர்களோ, 'சகோதரரே, நாம் அந்த நபரைக் குறித்து முடிவெடுத்து இந்த மதவெறி சம்பந்தப்பட்ட காரியங்களையெல்லாம் தடுத்து நிறுத்துவோம்“ என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். ஆகவே அவனை காலை மட்டுமாக சிறையில் அடைத்து வைத்தனர். ஆலோசனை சங்கக்கூட்டம் கூடியதும் கிட்டதட்ட ஐந்து லட்சத்திற்கும் மேலானோர் அங்கே கூடினார்கள். வயதான சிறிய ஸ்தேவானை அங்கு நிறுத்தினார்கள். 22ஆனாலும் அவன் அங்கே வரும்பொழுதே, ஓ சகோதரனே, அவனுடைய முகம் தேவதூதனைப் போல பிரகாசித்தது. ஏதோ வெளிச்சம் வீசுவது போல; நான் கற்பனை செய்யவில்லை; தான் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்ததினாலே அவன் முகம் நிச்சயமாகவே பிரகாசித்தது. ஒரு தேவதூதனோ அல்லது ஒரு வெளிச்சம் போன்ற வேறு ஏதோவொன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது என்று நான் கூறவில்லை. அவன் என்ன பேசுகிறோமென்று புரிந்திருந்ததினாலே பிரகாசித்தான் என்று கூறுகிறது. அவ்விடத்திலே அவன் மிகவும் தைரியமுடையவனாய் இருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. திடமுடன் அவ்விடம் நடந்து சென்று, ''இஸ்ரவேல் புருஷரே'', என்று அழைத்தான். அவனோ அங்கே அவனுடைய இரத்தத்திற்காக பல்லை கடித்துக்கொண்டு பசியோடே காத்திருக்கும் பத்தாயிரம் ஓநாய்கள் நடுவிலிருக்கும் ஆட்டுக்குட்டியைப் போல நின்றுக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்து, 'இஸ்ரவேலின் மற்றும் யூதாவின் புருஷரே மற்றும் பிதாக்களே, இந்த காரியத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நம்முடைய பிதாக்களின் தேவன் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, கல்தேயருடைய தேசத்திலிருந்து வெளியே அழைத்து இந்த தேசத்தை தருவதாக வாக்குதத்தம் பண்ணினார். அவரிடமிருந்துதான் இயேசு கிறிஸ்து வந்தார். அவரைத்தான் நீங்கள் உங்கள் பொல்லாத கரங்களினாலே சிலுவையிலறைந்து கொன்று போட்டீர்கள்'', என்றான். அவ்வாறு கூறின பிறகு, ஓ, அந்த பிரசங்கம் பதிவு செய்யப்பட்டு கேட்க நான் விரும்புகிறேன். சகோதரன் பீலர் அவர்களே, அவ்விதமான ஒன்றைப் பெற நான் விரும்புகிறேன். பின்னும் அவர்களைப் பார்த்து, 'ஓ வணங்கா கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே நீங்கள் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள், உங்கள் பிதாக்கள் செய்தது போல நீங்களும் செய்கிறீர்கள்'', என்றான். ஆம் ஐயா‚ 'நீங்கள் வணங்கா கழுத்துள்ளவர்கள், செவியிலும், இருதயத்திலும் விருத்தசேதனம் பெறாதவர்கள், பரிசுத்தாவிக்கு உங்கள் பிதாக்கள் எதிர்த்து நின்றது போலவே நீங்களும் எதிர்த்து நிற்கிறீர்கள்'', என்றான். சகோதரனே, அவன் அப்படிதான் மரிக்கப் போகிறான் என்று தெரிந்த பிறகும் இப்படிப் பேசினது ஒன்றும் லேசான காரியம் அல்ல. இல்லையா? 23வேதம் சொல்லுகிறது, 'அந்த மனிதன் நிரம்பியிருந்தான்''..., என்று. எதினால் நிரம்பியிருந்தான்? முட்டாள்தனத்தினாலா? இல்லை ஐயா. வேதபாண்டியத்தினாலா? இல்லை ஐயா‚ 'அவன் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தான்'', அவன் இப்படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதினால்தான் இப்பேற்பட்ட தரமான மகத்தான குணாதிசயங்களெல்லாம் வருகின்றன. உலகமோ வெளியே தள்ளப்பட்டது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்துவிட்டார். ''அவன் முற்றிலுமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதன்''. ஓ அவனைத் தடுத்து நிறுத்துவதா? உங்களால் அது முடியவே முடியாது. அவனை நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முடியாது. சகோதரனே அவன் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பிரசங்கித்தே ஆகவேண்டும். அந்தப்படியே அவன் பிரசங்கம் செய்ததோடே, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். 24பின்பு அவர்களெல்லோரும் பல்லைக் கடித்துக்கொண்டு அவன் மீது பாய்ந்து, சபையிலிருந்து வெளியே அந்த இடத்திற்கு இழுத்துச் சென்று அவனைக் கொன்று போட்டார்கள். அவன் நசுங்கி சாகும்வரைக்கும் பாறைகளையும் களிமண் கட்டிகளையும் அவன் மீது எறிந்தார்கள். அப்பொழுது பவுலும் அங்கேதான் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பவுல் கீழே கிடந்த ஸ்தேவானைப் பார்க்கும் போது அவனோ மேலே பார்த்து, 'இதோ வானங்கள் திறக்கிறதைக் காண்கிறேன். வானங்கள் திறக்கிறதையும் இயேசு தேவனின் வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்'', என்றான். நான் இப்படியாக கற்பனை செய்து பார்க்கிறேன். அவனோ, 'தேவரீர் இந்த பாவத்தை அவர்கள் மீது சுமத்த வேண்டாம்'', என்றவுடன் பவுல் கீழே பார்த்து, 'இங்கே என்ன நடக்கிறது'', என்று தன் தலையை சொரிந்துக் கொண்டே யோசித்திருப்பான். அதன்பின் அவன் கல்லெறியடையும் போதே தேவனுடைய கரங்களில் உறங்கிப் போனான். என்னவாயிற்று? அந்த நிமிடம் முதற்கொண்டு அவன் மீது எறியுண்ட எந்த கல்லையும் அவன் உணரவில்லை. ஒரு பால் குடிக்கும் குழந்தையை எப்படியாக ஒரு தாய் தாலாட்டி உறங்க வைப்பாளோ அதேப்போல் தேவன் அவனை உறங்க வைத்தார். தேவன் அவனை அக்கரையில் இருக்கும் அவருடைய சிங்காசனத்திற்கு கிறிஸ்துவின் மார்பில் அணைத்தவாறு எடுத்துச் சென்றார். அங்கே அவன் இளைப்பாறுகிறான். இப்பொழுது அவனும் இரத்த சாட்சிகளில் ஒருவன். அவனுக்கு இரத்த சாட்சிகளின் கீரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் மத்தியில் சாகா வரமுடையவனாய் இருக்கிறான். அதுதான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஸ்தேவான். அது சரியே களிமண் கட்டிகளும் பெரிய பாறைகளும் அவன் தலையில் விழுந்துக் கொண்டே இருந்தாலும் அதை அவன் உணரவேயில்லை. வேதாகமம் அவன் இறந்து போனான் என்று ஒருக்காலும் கூறவில்லை, அவன் உறங்கினான் என்றே கூறுகிறது. ஆமென். அப்படிதான் கிறிஸ்தவர்கள் மரிப்பார்கள். ஆமென். அது சரிதான். 25இப்பொழுது, அவர்களுக்கு ஒரு மிக அருமையான நேரம் உண்டாயிருந்தது. அது குறித்ததான அறிக்கையானது வந்தது. கிட்டதட்ட சகோதரன் நெவில் நமக்கு சற்று முன் அளித்த அறிக்கையை போன்றே இருந்தது. அது அப்போஸ்தலர்களை பெருமைப்படுத்துவதற்காக அல்ல. அவர்களால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். இப்பொழுது பேதுரு மற்றும் யோவான் என்ற இரு படிப்பறிவில்லாத எழுத்தறிவில்லாத நபர்கள் அந்த அலங்கார வாசலை கடந்து சென்றார்கள். ஓ என்னே‚ பிசாசு அப்பொழுது, 'இவர்கள் இப்பொழுது பிரசங்கிக்க மட்டும் தானே போகிறார்கள். அதினால் என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது'', என்று நினைத்துக் கொண்டான். அங்கே கூடியிருந்த மக்களும் அவர்களுடைய பிரசங்கத்தையும் மற்ற காரியங்களெல்லாவற்றையும் நம்பினார்கள். அந்தபடியே அவர்கள் அந்த அலங்கார வாசலை கடந்து செல்லும்போது அங்கே ஒரு மனிதன் கிடந்தான். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், 'பேதுருவே, அந்த மனிதனிடம் விசுவாசம் இருக்கிறது, அவனை சுகப்படுத்த முடியும்“, என்று சொன்னார். இவனும் அவன் சுகமடையத்தக்க விசுவாசம் கொண்டிருப்பதை கண்டவுடன், 'நீ எழும்பி நில்”, என்றான். அவனும் அப்படியே எழும்பி தன்னுடைய கால்கள் பெலனடையும்வரை இவனை பற்றி சென்றான். பின்பு தேவனை துதித்துக் கொண்டே துள்ளி குதித்துக் கொண்டே சென்றான். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவர்கள் செய்த எல்லா பிரசங்கங்களை காட்டிலும் இதுதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. 26சகோதரனே, மகத்தான காரியங்கள் நிகழத் துவங்கினதும், கவனி, உடனே பாதளத்திலுள்ள மோசமான வேட்டை நாய்கள் எல்லாம் பலமாக குறைக்க துவங்கும். இரத்தத்திற்காக அலையும். அது சரிதானே? உண்மை‚ நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்கிறேன், பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டனர். அப்படியானபொழுதும் கூட பிசாசு தன் கட்டிலை விட்டுக்கூட அசையவில்லை. அது சரிதான். 'சரி விடு, அவர்களையெல்லாம் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடு'', என்றான். புரிகிறதா? ஆனால் அடுத்த நாள் அலங்கார வாசல் வழியாக கடந்து செல்லும் போது தன் தாயின் வயிற்றிலிருந்தே முடமாக பிறந்த ஒருவனை சுகமடைய செய்தான். அவ்வளவுதான், அந்த நிமிடமே காரியங்கள் மிக உக்கிரமாய் மாறிப் போயின. அவன் இரா முழுவதும் அங்கேயே சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். 'இந்த தெய்வீக சுகமளித்தல் போன்ற காரியங்களெல்லாம் இப்பொழுது துவங்க விடமுடியாது. அப்படிவிட்டால் என்னுடைய எல்லாவற்றையும் என்னிடமிருந்து தட்டி பறித்துவிடுவார்கள்'', என்று பிசாசு சொன்னான். 'எப்போதாவது ஒருமுறை அவர்களை வேத வசனங்களைக் கொண்டு ஏமாற்றிவிடலாம். ஆனால் அசலான ஒன்று வருவதை மக்கள் பார்த்துவிட்டால் அவர்களை ஏமாற்றவே முடியாது. இதை அடுத்த கூட்ட மக்கள் வருவதற்கு முன்னமே இதை நிறுத்த வேண்டும்'', என்று பிசாசுகளிடம் சொன்னான். 27ஆனாலும் அவனால் அன்றும் நிறுத்த முடியவில்லை; இன்றைக்கும் நிறுத்த முடியாது. ஆம், தேவனுடைய சுவிசேஷமானது தொடர்ந்து நகர்ந்து சென்றுகொண்டே இருக்கும். 'வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் சரி, அந்த வார்த்தையானது மாறாமல் நிலைத்து நிற்கும்''. அதனால் ஒழிந்து போகவே முடியாது. தேவனைப் போலவே அந்த வார்த்தையும் நித்தியமானது. அதனால் கடந்து போகவே முடியாது. ஆகவே ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். இயேசு என்னவாகயெல்லாம் இருந்தாரோ அதேபோலதான் இப்பொழுதும் இருக்கிறார். எப்பொழுதும் அப்படியே இருப்பார். ஆம். அவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதிருக்கிறார். இப்பொழுது பெந்தெகோஸ்தே நாளிலே இறங்கின அதே பரிசுத்த ஆவியானவர்தான் இன்றும் இருக்கிறார். ஆனால் அதை மிதித்தும், கேலிகூத்தாக்கியும், தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டும் மற்றும் தவறாக சித்தரிக்கப்படுதல் போன்று பல காரியங்களுக்குட்பட்டிருக்கிறது, என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அப்பேற்பட்ட போலியான காரியங்களையெல்லாம் செய்வது பிசாசுதான். உண்மையான பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் ஒன்று இருக்கிறது. அது பெந்தெகொஸ்தே நாளிலே என்ன கனிகளை உற்பத்தி செய்ததோ அதே கனிகளை மீண்டும் உற்பத்தி செய்யும். அது உண்மை. 28பிசாசு இன்னுமாக தன்னுடைய பழைய கண்ணிகளை அங்கேதான் வைத்திருக்கிறான். நான் உண்மையைதான் கூறுகிறேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த பயமுறுத்தும் சோளபொம்மையை காணும்போது அதைச் சுற்றி ஏதோ ஒரு நன்மையான காரியம் இருக்கிறது என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அது நிச்சயமாக சரிதான். நீங்கள் ஒரு சோளபொம்மையை ஒரு அன்னாசி பழத்தின் அருகிலோ அல்லது எந்த ஒரு புதரில் விளையும் பழங்களின் அருகிலோ பார்க்க முடியாது. இனிமையான பழங்களை உற்பத்தி செய்யும் மரங்களின் கனிகளை பாதுகாக்கதான் இந்த சோளபொம்மையை வைத்து மற்றவைகளை விரட்டுவார்கள். அதேப்போல எங்கெல்லாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு அசலான மார்க்கம் இருக்கிறதோ அதைச் சுற்றியெல்லாம் பிசாசானவன் சோள பொம்மைகளை வைத்துவிடுகிறான். ஏனென்றால் சரியாக அதன் மத்தியில்தான் உயிர்த்தெழுந்த தேவகுமாரனாம் இயேசு கிறிஸ்து தம்முடைய நித்தியமான வல்லமையுடன் நேற்றும், இன்றும், என்றென்றுமாய் இருக்கிறார். ஆமென்; அதற்கு அர்த்தம் ''அது அப்படியே ஆகக்கடவது'', என்பதாம் சரியே‚ 29இப்பொழுது, அவர்களை சிறைச்சாலையின் உள்ளறையிலே அடைத்து வைத்திருந்தார்கள் என்று பார்க்கிறோம். அடுத்த நாள் காலையிலே அவர்களை கடுமையாக அடித்து உதைத்துவிட்டு அனுப்பி வைத்தனர். மீண்டுமாக 4ஆம் அதிகாரத்தில் பேதுரு அன்று காலையில் அவர்கள் மத்தியில் நின்றுக் கொண்டிருப்பதை காண்கிறோம். அவன் அவர்களை நோக்கி, ''இஸ்ரவேலின் புருஷர்களே மற்றும் யூதேயாவில் வாசம் செய்கிறவர்களே, இந்த காரியங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நசரேயனாகிய இயேசு தான் தேவ மனுஷன் என்பதை நிரூபித்திருந்தார். தேவன் அவர் மூலமாக பல அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து அவர் தேவனுடைய மனுஷன் என்பதை நிரூபித்தார்'', என்று கூறினான். அவர்களும் அவர் தேவ மனிதன் என்பதை அறிந்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து, ''நீங்கள் உங்கள் பொல்லாத கைகளினாலே ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள், அவரையே தேவன் ஜீவனோடு எழுப்பினார், அதற்கு நாங்கள் சாட்சி'', என்றான். மீண்டுமாக, 'அவருடைய நாமத்தின் மீதிருந்த விசுவாசத்தினாலே இந்த மனிதன் பரிபூரணமடைந்தான். நம்முடைய நற்கிரியைகளினாலே சோதிக்கப்படுகிறோமென்றால், ஓ இஸ்ரவேலே நீ அறிந்திருக்க வேண்டியது என்னவென்றால்'', இன்று நாம் நம்முடைய நற்கிரியைகளினிமித்தம் சோதிக்கப்படுகிறோமானால்... நீங்களும் இஸ்ரவேல் வீட்டார் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது என்னவென்றால் இந்த மனிதன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே சுகமடைந்தான்''. 30அவர்களோ, ''நீங்கள் எந்த மதக்குழுவை சார்ந்தவர்கள்? நீங்கள் எங்கே நியமிக்கப்பட்டீர்கள்? எந்த கல்லறையிலிருந்து வெளியே வந்தீர்கள்?'', என்பதை போன்று கேட்டனர். ''இந்த காரியங்களெல்லாம் எங்கிருந்து வந்தது? இந்த உரிமையை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் எந்தக் குழுவை சார்ந்தவர்கள் என்று சொன்னால் நாங்கள் எங்கள் மூப்பரிடம் சென்று இந்த காரியங்களெல்லாவற்றையும் எதற்காக செய்கிறீர்கள் என்பதை பற்றி அறிந்துக்கொள்வோம். ஆமாம் ஐயா, இப்படிப்பட்ட தப்பான போதனைகளெல்லாம் இந்த இடத்தில் எந்த சபையில் போதிக்கிறார்கள் என்று நாங்கள் அறிந்திட வேண்டும். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'', என்றெல்லாம் அவர்களை கேள்வி கேட்டார்கள். பேதுருவோவென்றால், ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும், அந்த நாமத்தின் மேலிருந்த விசுவாசத்தினாலும், இந்த மனிதன் சுகமடைந்தான்'', என்றான். ஆமென். அவர்களோ அதைக்குறித்து ஒன்றுமே பேசக்கூடாமல் நின்று கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அந்த மனிதனும் அங்கே நின்று கொண்டிருந்தான். அவர்களும் அவனை அறிந்திருந்தார்கள். ஆமென். ஆமென். 31இப்பொழுது அவன் இங்கே என்ன சொல்கிறான் என்று கவனியுங்கள். 'வீடு கட்டுகிறவர்களாகிய நீங்கள்; புறக்கணித்த கல் இதுதான்... நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை'' என்றான். ஓ, அந்த கல்லை புறக்கணித்தல், ''அந்த கல் புறக்கணிக்கப்பட்டது'', ஏன்? சாலமோனின் தேவாலயம் கட்டப்படும்போது... கொஞ்சம் இந்த அருமையான காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாலமோன் தேவாலயத்தை கட்டும்போது அந்த கற்களெல்லாம் வெவ்வேறு இடங்களிலிருந்து வெட்டப்பட்டிருந்தது. சில கற்கள் ஒரு விதமாகவும் வேறு சில கற்கள் வேறு விதமாகவும் வெட்டப்பட்டிருந்தது. வேதம் சொல்கிறது அவைகளையெல்லாம் ஒன்றிணைத்து தேவாலயத்தை கட்டி எழுப்புவதற்கு நாற்பது ஆண்டுகளாயின என்று நான் விசுவாசிக்கிறேன், அந்த நாற்பது ஆண்டுகளிலும் அங்கே ரம்பத்தின் சத்தமோ அல்லது உளியின் சத்தமோ கேட்கப்படவில்லை. கற்கள் ஒன்றின் மேலாக ஒன்றாக பொருத்தப்பட்டது. அது அப்படியே அமருவதற்கு சற்று சாந்து மட்டும் பூசப்பட வேண்டியிருந்தது. ஒரு கல்லின் மேல் இன்னொன்று, அதின் மேல் மற்றொன்று என்று அடுக்கப்பட்டது. அதை குறித்து ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். 32இப்பொழுது இது பற்றி என்னுடைய கருத்தை கூறுகிறேன் சகோதரனே. அங்கே இருக்கிறதான அந்த தேவாலயமானது இப்பொழுது நாம் இருக்கிறதான ஆவிக்குரிய தேவாலயத்தைக் குறிக்கிறது. அவர்கள் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக தேவாலயத்திற்கு வந்தார்கள். நாமோ தேவனுடைய ஆலயத்திற்குள்ளாக தேவனுடைய சரீரத்திற்குள்ளாக, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். ஆகவே நாம் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றதினாலே கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் என்று 1கொரிந்தியர் 12ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அந்தபடியே ரோமர் 8ஆம் அதிகாரமானது, ''ஆனபடியினால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை'', என்று கூறுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய காரியங்கள் மேலேயே வாஞ்சையாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாம்சத்தின் காரியங்கள் மேல் எந்த அக்கறையும் கிடையாது. என்னுடைய மாம்சமோ, ''நான் விடாய்த்து போனேன்“, என்கிறது. ஆனால் என் ஆவியோ, ''இல்லை, நீ ஒன்றும் விடாய்த்து போகவில்லை. நான்தான் உனக்கு எஜமானன். நான் சொல்வதை நீ கேள்'', என்கிறது. ஆமென். உதாரணத்திற்கு நாம் ஒரு நிகழ்வை பார்க்கும்போது, ஒரு மருத்துவர், 'அந்த நபர் சுகமடைய முடியாது. அவர் கதை முடிந்தது'', என்பார். நானும் அவர்களைப் பார்த்து, 'அது சரிதான்'', என்று கூறுவேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து, ''அந்த காரியம் சுகமடைய போகிறது'', என்று ஒரு தரிசனத்தை தருகிறார். அப்பொழுது நான், ''கர்த்தர் உரைக்கிறார். இந்த மனிதன் ஜீவிப்பான்“, என்று கூறுவேன். ஆகையால் நாம் இன்னமும் மாம்சத்துக்கேதுவான காரியங்களுக்கு பின்னால் நடப்பதில்லை. நாமோ ஆவிக்கேதுவான காரியங்களிலேயே நடக்கிறோம். அது சரியே. 33இப்பொழுது இந்த கற்களெல்லாம் உலகத்தின் வெவ்வேறான இடங்களிலிருந்து அங்கு ஒன்றாக வரும்பொழுதே வெட்டப்பட்டு வந்தது. அந்தபிரகாரமாக மரங்களும் லீபனோனிலுள்ள உயரமான கேதுருக்களிலிருந்து வெட்டப்பட்டு காளை மாட்டு வண்டிகளிலே யோப்பாவிற்கு கொண்டு வரப்பட்டு, மீண்டுமாக அங்கிருந்து கட்டுமரத்தோணியிலே தேவாலயம் கட்டப்பட கொண்டு வரப்பட்டது. அங்கே அவையெல்லாம் ஒன்றாக சேர்க்கப்பட்டன. இங்கே ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வெட்டப்பட்டிருந்த கற்கள் ஒன்று ஒரு விதமாகவும் மற்றொன்று வேறு விதமாகவும் இருந்தது. அவைகளை வெட்டும்போது அந்த கல்தச்சர்கள் தங்களுக்குள்ளேயே வாக்குவாதம் செய்து சண்டை போட்டிருக்கலாம். அது இன்றைய சில போதகர்கள், ''நான் மெத்தடிஸ்டை சார்ந்தவன் என்றும் நான் சர்ச் ஆப் காட், நான் அசெம்பளிஸ் சபையை சார்ந்தவன் அல்லது அதை சார்ந்தவன்'', என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பதை போலவே இருக்கிறது. ஆனால் ஒரு காரியத்தை நினைவில் கொள்ளுங்கள், தேவன் தான் வெட்டுகின்ற காரியங்களை செய்கிறவர். ஒன்றை இந்த விதமாகவும், மற்றொன்றை வேறு விதமாகவும் வெட்டும் போது அவர்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவைகளையெல்லாம் ஒன்றாக சேர்த்திட அவர்கள் சென்ற போது அவைகளையெல்லாம் தரையிலே போட்டு வைத்திருந்தனர். அதை எடுத்து ஒன்றின் மேலாக ஒன்றாக அடுக்கி வைக்கும்போது அதை இன்னுமாக வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 34இப்பொழுதும் மகத்தான இன்றொரு நாளிலே, தீர்க்கதரிசனத்தின்படி சபைகளெல்லாம் ஒன்றாக இணைந்து ஐக்கியமாக மாறி, அமெரிக்க தேசத்திலிருந்து புதிய போப்பை ஏற்படுத்தும். அவர்கள் அந்த மிருகத்திற்கு ஒப்பான சொரூபத்தை உருவாக்குவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனாலும் நான் உங்களுக்கு சொல்லட்டும், அந்த அசலான சபையும் ஒன்றாக இணைக்கப்படும். அந்த அசலான உண்மையான விசுவாசிகள் மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்து, நசரேயன், பரிசுத்த யாத்திரீகர்கள்;, மற்றும் வேறு எந்த இடத்திலிருந்தாலும் சரி, அவர்களெல்லாரும் தேவனுடைய அன்பினால் இணைக்கப்பட்டு ஒன்றிணைந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாவார்கள். மற்றும் கடவுளை பற்றின உறுதியான நிலை இல்லாதவர்களும் ஆழமான சிந்தனையற்றவர்களும் ஒரு பக்கமாக ஒதுக்கப்படுவார்கள். அவர்கள் நேராகச் சென்று அந்த சபைகளின் ஐக்கிய கூட்டத்திற்குள்ளே செல்வார்கள். 35அதேப்போல் அன்றொரு நாள் அசெம்ப்ளி ஆப் காட் சபையும் கூட அந்த சபைகளின் ஐக்கிய கூட்டத்திற்குள்ளாக சேர்ந்துவிட்டது என்று வாசித்தேன். அவர்கள் தங்களுடைய சுவிசேஷ போதனைகளையெல்லாம் மறுதலித்த பின்னர் தான் அப்படி செய்திருக்க முடியும். அது சரியே. அந்த சபைகளின் ஐக்கியங்களுக்குள்ளே செல்வதற்காக தங்களுடைய பெந்தெகொஸ்தே அடையாளங்களையும், அற்புதங்களையும் மற்றும் கொள்கைகளெல்லாவற்றையும் மறுதலித்திருக்க வேண்டும். வெறும் பெருமைக்காக, ஓ சகோதரனே, அவையெல்லாவற்றையும் மறுதலிக்க வேண்டும். நான் அநேக முறை சொல்லியிருந்தது போல, இந்த உலகம் தரக்கூடிய மிகச் சிறந்தவற்றை பெறுவதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலும் அவருடைய வேதத்திலுள்ள விசுவாசத்தையும் விட்டுக் கொடுப்பதைக் காட்டிலும் அவருடைய ஊழியக்காரனாக இருந்து, வயிறு தரையில் படும்படி படுத்து ஓடை நீரைக் குடித்து மலிவான பிஸ்கோத்தை சாப்பிட்டு, தேவனிடத்தில் பிரசித்தி பெற்றவனாக இருப்பதையே விரும்புகிறேன். இது தேவனுடைய வீழ்ந்து போகாத வார்த்தை என்பதையும் அவைகளில் ஒவ்வொன்றும் பிழையின்றியே இருக்கிறது என்பதையும் விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா‚ 36சரி, இப்பொழுது அவர்களெல்லோரும் எப்படி வேலை செய்தார்கள் என்று பார்ப்போம். அவர்கள் வந்து அவர்கள் புறக்கணித்த... அந்த கற்களையெல்லாம் இறக்கி வைத்தார்கள். அதில் வேடிக்கையான தோற்றமுடைய ஒரு கல்லைக் கண்டார்கள். அந்த கல்லை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. ''இந்த கல் எதற்குமே பிரயோஜனப்படாது“ என்றார்கள். ஆகையால் அதை எட்டி உதைத்து அங்கிருந்து குப்பை குவியலிலே தள்ளி விட்டார்கள். அவர்களால் அதை பயன்படுத்த முடியவில்லை. அந்த கல் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. இப்பொழுது அவர்கள் அந்த கட்டிடத்தை கட்டிட ஆரம்பித்தார்கள். அப்படியாக ஒரு இடத்திற்கு அந்த கற்களையெல்லாம் வைத்தார்கள். இப்படியும் அப்படியுமாக வைத்தார்கள். அது ஒரு நிலையை அடைந்த பிறகு மூலையில் வைப்பதற்கான கல்லை அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர்கள் கட்டிக்கொண்டே கட்டிக்கொண்டே போய்கொண்டிருந்தார்கள். அந்த கட்டிடம் ஒரு நிலையை அடைந்தது, அதற்குமேல் கட்டமுடியவில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஒரு மூலைக்கல் தேவைப்பட்டது. அந்த மூலைக்கல்லை கண்டுபிடித்திட மற்றெல்லா கற்களையும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அப்பொழுதுதான் யாரோ ஒருவர் அங்கிருந்த குப்பைக்குள்ளாக பார்த்தார். அவர்கள் புறக்கணித்திருந்த அந்தக் கல்தான் மூலைக்குத் தலைக்கல்லாக இருந்தது. நண்பர்களே, இன்றைக்கும் அதே நிலைதான். மெத்தடிஸ்ட் சபையாயிருக்கட்டும், அல்லது பாப்டிஸ்ட் சபையாயிருக்கட்டும் அல்லது பிரிஸ்பிட்டேரியன், பெந்தெகொஸ்தே, நசரேயன், பரிசுத்த யாத்திரீகர்கள் என எதுவாக இருந்தாலும் சரி, அவர்களெல்லொரும் சரிதான் ஆனாலும் சகோதரனே காரியம் என்னவென்றால் அவர்களெல்லாரும் அந்த உண்மையான மூலைக்கல்லை புறம்பே தள்ளினார்கள். (சகோதரன் பிரான்ஹாம் ஐந்து முறை பிரசங்க பீடத்தை தட்டுகிறார்). 'அற்புதங்கள் நடைபெறும் நாட்களெல்லாம் கடந்து போயிற்று. தெய்வீக சுகமடைதல் என்றெல்லாம் ஒன்று இல்லவே இல்லை. அந்நிய பாஷை என்று ஒன்றுமே கிடையாது. இயற்கைக்கு மேம்பட்ட காரியமெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது, அவையெல்லாம் கடந்து போன நாட்களில் மட்டுமே இருந்தது'', என்கிறார்கள். இப்பொழுதும் சகோதரனே இந்த பிரகாரமாக செய்கின்ற ஒவ்வொருவரையும் அப்படியே முடக்கி ஒரு அலமாரியில் அடைத்து விடுகிறார்கள். அவர்களுக்கும், விடுதிகளாகிய ஸ்தாபனங்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. அவர்களிடம் ஒரு கூட்ட மக்கள் சேர்ந்துள்ளார்கள்தான்; ஆனால், வேதாகம் அவர்கள், ''தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள், அவர்களை விட்டுவிலகு'', என்று கூறுகிறது. 37ஆனால் சபையாக இந்த ஸ்தாபனங்களெல்லாம் சேர்ந்து என்ன கட்ட முயற்சி செய்கிறார்கள் என்பதை காண்கிறார்கள். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் விட்டு விட்டு வேறு எந்த ஒரு காரியத்தின் மீதும் கட்டவே முடியாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, நீங்கள், 'ஓ, நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்கிறீர்கள்'' நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால், ''தேவனுடைய வார்த்தையானது ஏவுதலினால் உண்டானது. அவர் இன்றிரவும் அதே கர்த்தராகிய இயேசுவாயிருக்கிறார். அவர் என்னென்ன செய்வேனென்று வாக்குரைத்தாரோ அதே காரியத்தைதான் செய்கிறார்'', என்று கூறக்கூடிய ஒன்றையே பெறுவீர்கள். இல்லையென்றால் நீங்கள் கர்த்தராகிய இயேசுவை பெறவே இல்லை. ஏதோ வேத சாஸ்திரத்தை பெற்றிருக்கிறீர்களே தவிர கர்த்தராகிய இயேசுவை பெறவேயில்லை. ஏனென்றால் இயேசுவானவர் உங்கள் இருதயத்திற்குள்ளாக வரும்பொழுது ஏதோ ஒன்று ஏற்படுகிறது, அப்பொழுது தேவன் கூறும் எல்லாவற்றையும் விசுவாசிப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் அது அப்படியாகத்தான் இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும். பாதாளத்திலுள்ள மொத்த பிசாசுகளினாலும் அதை அசைத்து எடுக்கவே முடியாது. ஏன், ஏனென்றால் நீங்கள் அதை நிச்சயமாக விசுவாசிக்கிறீர்கள். தேவனே அந்த காரியத்தை உரைத்திட்டார், அதற்கு மிஞ்சினது வேறொன்றுமில்லை. ''அது கர்த்தர் உரைக்கிறதாவது'', என்ற பட்சத்தில் உங்கள் நம்பிக்கையெல்லாம் அதன் மீது ஆதாரப்பட்டிருக்கட்டும். வாழ்வானாலும் சரி சாவானாலும் சரி, என்னவாக இருந்தாலும் அதையே விசுவாசியுங்கள். நீங்கள் அது உண்மை என்று விசுவாசிக்கின்றபடியால் எந்த நேரமாயிருந்தாலும் சரி, உங்கள் இரத்தத்தைக் கொண்டு உங்கள் சாட்சியை நிரூபிக்க தயாராக இருக்கிறீர்கள். அது தேவனே உரைத்தபடியால் நீங்கள் அது உண்மை என்பதை அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளாக இருக்கும் ஏதோ ஒரு காரியம் அது உண்மைதான் என்பதை அறிந்திருக்கிறது. 38இப்பொழுதோ நீங்கள் அதை ஒரு கல்வி அறிவுடன் வந்து, ''இது இப்படியல்ல, அது அப்படியல்ல என்று தர்க்கித்து, இதை நம்புவதில்லை, அதை நம்புவதில்லை“, என்றெல்லாம் தர்கம் செய்து என்னால் நம்ப இயலவில்லை என்று இன்றிரவும் இந்த நியூ ஆல்பனி என்ற இடத்திலும் ஒருவேளை அதே காரியத்தை செய்து நீங்கள் தேவனோடு தர்கித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் அப்படி செய்கிறீர்கள்? 39சற்று நேரம் இந்த மக்கள் என்ன ஜெபத்தை ஏறெடுக்கிறார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். அவர்கள், ''அஞ்ஞானிகள் ஏன் கொந்தளிக்கிறார்கள்? மக்கள் ஏன் வீணான காரியத்தைச் சிந்திக்கிறார்கள்'', (நிச்சயமாக தேவரீர் உம்முடைய குமாரனாம் இயேசுவைக் குறித்து) மக்கள் ஏன் வீணான காரியத்தை கற்பனை செய்கிறார்கள்? உம்முடைய ஊழியக்காரர்கள் ஒருமனதோடு ஜெபிக்கும்போது, தேவனுடைய வார்த்தையை உரைப்பதற்கான தைரியத்தை பெற்றிடவும், உம்முடைய குமாரனாம் இயேசுவின் கரத்தை நீட்டி வியாதியஸ்தரை சொஸ்தமாக்கவும் செய்வீராக‚ 40ஆமென். தேவரீர் அப்படியான ஒரு ஜெபக்கூடுகையை நாங்களும் கொண்டிருக்க உதவி செய்வீராக. அவர்கள் ஜெபித்தபோதோ அவர்கள் ஒன்றாகக் கூடியிருந்த அந்த கட்டிடமே அதிர்ந்தது. அந்த ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் உண்டாயிருந்த ஒரே மனமும் ஏக சிந்தனையுமே நமக்குத் தேவை. அவர்கள் கிறிஸ்து இயேசுவிற்குள் தங்களை முற்றிலுமாய் அற்பணித்ததினால் இதைக் குறித்தும், அதைக் குறித்தும் வேறெந்த காரியத்தைக் குறித்தும் கவலைப்படவில்லை. என்னுடைய நம்பிக்கையோ அவருடைய இரத்தத்திலும் அவருடைய நீதியிலுமே கட்டப்பட்டிருக்கிறது. நாளைய தினத்தில் சூரியன் உதித்தாலும் சரி, உதிக்காவிட்டாலும் சரி; நாமெல்லோரும் எப்பேற்பட்ட கிரயத்தை செலுத்த வேண்டியிருந்தாலும்; கர்த்தராகிய இயேசுவையே சேவித்து அவருடைய அடிச்சுவடிகளில் நடப்போம் என்ற வாக்குறுதியினால் தேவனுக்கு முன்பாக ஏகமாய் ஒன்றிணையும் போதுதான் சபையானது நகர்ந்து முன்னேறி செல்வதைக் காண முடியும். ஆமென். ''அவருடைய நாமத்தையன்றி வேறொன்றிலும் இரட்சிப்பு இல்லை நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறெந்த நாமமும் கொடுக்கப்படவில்லை“, என்று உரைத்திருக்கிறார். 41ஒரு குறிப்பிட்ட சிறிய சகோதரி இந்த சபைக்கு வந்திருக்கிறார். அவர் இங்குள்ள அங்கத்தினர் அல்ல. அவர் ஒரு மெத்தடிஸ்ட். ஆனாலும் அவர் நம்மை நேசித்தபடியால் இங்கே சபைக்கு வந்தார். இது என்னுடைய செவிக்கு வந்த காரியம். நீங்கள் வேண்டுமானால் அவர்களை அழைத்து கேட்டுபாருங்கள். அவர்களை மற்றொரு ஸ்திரீ அழைத்து, ''நீங்கள் எங்கே சபைக்கு போகிறீர்கள்“, என்று விசாரித்தார். அதற்கு அவர், ''நான் பிரான்ஹாம் கூடாரத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறேன்'', என்றார். அதை கேட்டதும், ''நீங்கள் அந்த மாதிரியான உபதேசங்களை கேட்ட பிறகும் மீண்டும் அங்கே சென்று இன்னமும் அதன் கீழாக உட்கார்ந்திருக்கிறீர்களா?'', என்றார். அதற்கு இவர், ''அந்த மாதிரியான உபதேசம் என்றால்?“, என்று கேட்டார். ''அதாவது அவர்கள் இயேசுவை குறித்து கொஞ்சம் அதிகமாகவே பெருமையாக பேசுகிறார்கள் ஞானஸ்நானத்தை எடுத்தாலும் அவருடைய நாமத்தைதான் பயன்படுத்துவார்கள், எந்த காரியமானாலும் இயேசுவின் நாமத்தையே பயன்படுத்துவார்கள்“, என்றார். சகோதரரே, வேதாகமம் ''நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழெங்கும், மனுஷருக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறெந்த நாமமும் கொடுக்கப்படவில்லை'', என்று நிச்சயமாக கூறுகிறது. சகோதரனே நான் உங்களுக்கு கூறட்டும், நான் சிறு சிறு காரியங்களை குறித்து குறை கூறிக்கொண்டே இருப்பவன் அல்ல. ஆனாலும் வேதாகமத்தை கொண்ட எங்கேயானாலும் சரி எப்பொழுது வேண்டுமானாலும் சரி, எந்த காரியம் தவறானது? (சகோதரன் பிரன்ஹாம் ஐந்து முறை பிரசங்க பீடத்தை தட்டுகிறார்) அது சரி. 'உனக்கு மூளை குழம்பிவிட்டது“, என்று சொன்னாலும் சரி அல்லது வேறெந்த காரியத்தை சொன்னாலும் சரி, அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. 42ஒரு நாள் சில புத்தகங்களை வாங்குவதற்காக ஒரு புத்தக கடைக்கு சென்றிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த ஸ்திரீ என்னிடம் ''அந்த புத்தகங்களெல்லாம் என்னுடைய கடையில் இருக்காது. நான் அதை விற்கவும் மாட்டேன்'', என்றார். ''ஒரு ஸ்திரீ வந்து அந்த புத்தகம் எல்லாவற்றையும் வாங்கிவிட்டார்'', என்றார். (She had Seven) இவரிடம் ஏழு புத்தகங்கள் இருந்தது அந்த ஸ்திரீயோ அவ்வனைத்து புத்தகங்களையும் வாங்கிவிட்டார். அவையெல்லாவற்றையும் ஒழித்துக்கட்ட தீர்மானித்திருக்க கூடும். அப்பொழுது அங்கே... தெய்வீக சுகமளித்தல் குறித்ததான பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. அந்நேரம் இரண்டு மெத்தடிஸ்ட் பிரசங்கிமாரும் ஒரு பிரஸ்பிட்டேரியன் பிரசங்கியும் அங்கே நின்றுகொண்டிருந்தனர். அந்த மெத்தடிஸ்ட் பிரசங்கிகளும் பிரஸ்பைடேரியன் பிரசங்கியும், 'நீர் சொல்வது சரிதான்“, என்று எனக்காக நின்றார்கள். நான் அங்கிருந்து கிளம்பும்போது, நான் யோசித்தேன்… அப்பொழுது சகோதரன் ஷைர் (Shire) அங்கே நின்றுகொண்டிருந்தார். அந்நேரம் சகோதரன் கிரீச் அவர்களும் உள்ளே வந்தார். பிறகு எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தனர். அப்பொழுது இந்த மெத்தடிஸ்ட் பிரசங்கி என்னிடம் வந்து, என்னுடைய தோள் மீது கை வைத்து, 'சகோதரன் பிரான்ஹாம், நீர் சிறுவனாக கால்களில் பூட்ஸ் காலனிகளோடும் அழுக்கு படிந்த முகத்தோடும் அந்த கம்பத்தில் ஏறிக்கொண்டிருந்த அந்த சமயத்திலேயே நான் உம்மிடம் வந்திருக்கிறேன். நீர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியும். என்னுடைய தாயாரோ சிறுநீரகத்தில் பிரச்சனையோடு படுத்துக்கொண்டிருந்தார். அது குணமடையக் கூடியதாக இல்லை. அவர் மரிக்கும் தருவாயில் படுத்துக்கொண்டிருக்கும்போது நீர் அங்கே வந்தீர். உம்முடைய பூட்ஸ் காலனிகளையும் உம்முடைய கருவிகளையும் கழற்றி வைத்துவிட்டு, முழங்காற்படியிட்டு, என் தாயாருக்காக ஜெபித்தீர். அன்றிலிருந்து ஒரு வாரத்திலேயே அவர் பூரணமாக குணமடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இந்த காரியம் நடந்து இருபத்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கும் நலமாகவும் சுகமாகவும் இருக்கிறார். ஆகையால் என்னுடைய சபையை குறித்தோ மற்ற காரியங்கள் குறித்தோ எனக்கு கவலை இல்லை. நான் விசுவாசிக்கிறேன்“, என்றார். அல்லேலூயா‚ இதோ இருக்கிறதே காரியம். 43''இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை''. காலங்கள் வந்து போகும், காரியங்களும் மாறும், ஆனாலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நித்திய நித்திய காலமும் மாறாமல் இருக்கும். ''இந்த கல்லின் மேல் என்னுடைய சபையை கட்டுவேன்'', அந்த சபையானது என்ன? அந்த கல்தான் என்ன? அதைப்பற்றி கத்தோலிக்க சபையிடம் கேட்பீர்களானால், அவர்கள், 'அங்கே ஒரு பெரிய பாறை கிடக்கிறது. அதன் மேலே கத்தோலிக்க சபையின் தலையானவர் இன்றிரவு அமர்ந்திருக்கிறார். அந்த பாறையின் மேலிருந்து பாவங்களை மன்னிப்பதற்கான வல்லமையை மற்ற சபைகளுக்கு தருகிறார்'', என்பதே கத்தோலிக்கத்தின் விளக்கம். பிராடஸ்டன்ட் மக்களின் கருத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அவர்களிடம், ''அந்த கல் என்ன'', என்று கேளுங்கள். அவர்கள் அதற்கு, ''இயேசு கிறிஸ்துவே அந்த கல்'', என்பார்கள். ஓ சகோதரனே! 44ஆனால் இயேசு அதைக்குறித்து என்ன சொன்னார்? பேதுருவிடம், ''நீ என்ன சொல்கிறாய்'', என்று கேட்டார். அவர் தன்னைப் பற்றி அங்கே பேசவில்லை. அவர் அவனிடம், ''நான் யார் என்று கேட்டார்“. அதற்கு அவன், ''சிலர் நீர் மோசே என்றும், சிலர் எலியா என்றும் கூறுகின்றனர்'', என்றான் அவரோ அவனிடம், ''நான் யார் என்று நீ சொல்லுகிறாய்'', என்று கேட்டார். அதற்கு பேதுரு, ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'', என்றான். அப்பொழுது அவர் அவனிடம், ''யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. நீ எந்தவொரு மனிதனின் கோட்பாடுகளையும் சாரவில்லை. அல்லது எந்தவொரு வேதாகம பள்ளிகளிலேயும் பயிலவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கும் என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். ஆகையால் இந்த கல்லின் மேலேயே'', அல்லேலூயா‚ ''இந்த கல்லின் மேலேயே என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'', என்றார். 45ஒரு மனிதன் உண்மையாக தேவனுடைய ஆவியினால் பிறப்பானாகில் அவனுடைய உச்சந்தலை முதல் கால் விரல் நகம் வரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழும்பும் வல்லமையினாலே மாற்றப்படுவான். அவனுடைய சுயநலமான சொந்த எண்ணங்களெல்லாம் மறைந்து போகின்றன. தேவனே அந்த மனிதனை முற்றிலுமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறார். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து அதையே செயல்படுத்துகிறான். ''இந்த கல்லின் மேலே என் சபையை கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை''. ஆமென். அது உங்களுக்கு தேவன் மேலாக பக்தி பரவசத்தை உண்டாக்குகிறது அல்லவா? நிச்சயமாக உண்டாக்கும்! இந்த கல்தான் வீடு கட்டுகிறவர்கள் ஆகாததென்று தள்ளினது. அதேபோல கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை தவிர வேறெந்த நாமத்திலேயும் இரட்சிப்பு இல்லை. 'அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால்'', என்று இவ்விடத்திலே வேதம் விவரிக்கிறது. ''இவர்கள் எந்த பள்ளியில் படித்தவர்கள்? இந்த மனிதர்கள் அறிவில்லாதவர்கள். யார் இந்த படிப்பறிவில்லாதவர்களும் பள்ளிக்கே செல்லாத மக்களுமே‚ இவர்களுக்கு, அ, ஆ, இ, ஈ, கூட தெரியாதே. 'இத்தாண்ட, அத்தாண்ட, வேணா, இஸ்துகுணு வா, காலியாயிடுவ“ என்றெல்லாம் பேசும் அவர்கள் பேச்சு எப்படி இருக்கிறது. பார்‚ இவர்களெல்லாம் எப்படி பட்ட ஜனமோ? சரி, ஏதாவது வேதாகம கல்லூரிக்காவது சென்றிருக்கிறார்களா? நீர் டாக்டர் பட்டம் பெற்றவரா? என்றெல்லாம் பேசினார்கள். அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். 46அது தான் முக்கியமான காரியம் சகோதரனே (சகோதரன் பிரான்ஹாம் இரண்டு முறை கை தட்டுகிறார்) காபி கொட்டையிலிருந்து எப்படி காபி பொடி தயாரிக்கிறார்கள் என்ற ஞானம் உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய உயிர்தெழும்பும் வல்லமையையும் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் போதும், வேறொன்றும் அவசியமானதே இல்லை. ஆமாம் ஐயா. ஓ தேவனே‚ நான் அதிலே நங்கூரமிட்டிருக்கச் செய்யும். ஆண்டவரே‚ நான் அந்த மரத்தின் கீழே இளைப்பாறட்டும், அங்கே நீரூற்று பிரவாகித்து சுதந்திரமாய் ஓடுகிறதே‚ ஆட்டுக்குட்டியானவரே அங்கே வெளிச்சம்‚ இரட்சிக்கப்பட்ட ஆத்துமா ஒருபோதும் மரிப்பதில்லை‚ நான் அங்கே நங்கூரமிட்டிருக்கட்டும்‚ ஓ, ஆண்டவரே! என்றென்றைக்கும் பசுமையாயிருக்கும் மரத்தின் கீழாய் உட்காரட்டும். அங்கேதானே இந்த ஜீவியம் சென்று முடிவடைகிறது. ஓ‚ இவ்வுலகத்தின் வீணான செல்வத்திற்கு ஆசைப்படாதே‚ அவை சீக்கிரத்தில் அழிந்து போகுமே‚ இதோ அந்த பரலோக பொக்கிஷத்தை நாடுங்கள், அவை ஒருபோதும் ஒழிந்து போகாதே‚ தேவனுடைய என்றும் மாறா கரத்தை பற்றிக்கொள்ளுங்கள், தேவனுடைய என்றும் மாறா கரத்தை பற்றிக்கொள்ளுங்கள், (ஆம் அது சரிதான்) இந்த பிரயாணம் முடிவடையும் போது, நீங்கள் தேவனுக்கு உத்தமமாய் இருந்திருப்பீர்களானால், மகிமையிலே உங்கள் வீடு இருக்குமே‚ வெளிச்சமும் பிரகாசமுமாய், அதை பரவசமடைந்த உங்கள் ஆத்துமா காணுமே‚ 47இன்று இரவிலோ, காலையிலோ அல்லது மத்தியான வேளையிலோ, பல் பிடுங்கி எடுக்கப்படுவது போல உங்கள் ஆத்துமா உங்கள் சரீரத்தை விட்டு கடந்து செல்லப்போகிறது. நீங்களோ சுலபமாக அறுந்துபோகும் நூல்களின் மேலாக நடந்துக் கொண்டிருக்கின்றீர்கள். அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து போகலாம். ஆனால் நான் எதை குறித்து கவலைப்பட வேண்டும்? நீங்கள் எதைக் குறித்து கவலைப்படுகிறீர்கள்? அவரே அவனை தம்முடைய நித்தியமான சிறகுகளின் மேலே தூக்கியெடுப்பார். இவ்விடம் உடைந்து அவன் ஆத்துமா கடந்து செல்லும் போது அவரே அவனைப் பிடிப்பார். இந்த பாதையின் முடிவிலே யாரோ ஒருவர் நின்று கொண்டிருப்பார், அவர் அவனை தம்முடைய நித்தியமான கரத்தினால் தாங்கி பத்திரமாய் சுற்றிப் பிடித்து, மரண இருளின் பள்ளத்தாக்கினூடாய் அழைத்துச் சென்று, அவ்வண்டையிருக்கும் பிதாவின் முன்பாக பழுதற்றதும் குற்றமற்றதுமாக நிற்கச் செய்வார். ஆகையால் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் ஏன் இதைக் குறித்தும் அதைக் குறித்தும் மற்ற காரியங்கள் குறித்தும் அல்லது இந்த உலகம் சொல்லப்போகும் காரியத்தை குறித்தும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? தேவனுடைய நித்தியமான கரம் நம்முடனே இருக்குமட்டுமாக நாம் எதை குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லையே. 48புருஷரும் சரி, ஸ்திரீகளானாலும், பிள்ளைகளானாலும் மற்றும் கிறிஸ்துவை அறியாத வேறு யாராக இருந்தாலும் சரி, நீங்கள் அவரை சேவிக்காமல் இருப்பதற்கு ஒரே ஒரு காரணத்தை கூறுங்கள். இதோ கிறிஸ்துமஸ் தினமானது வரப்போகிறது. நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாய் அதை கடந்து செல்வதற்குரிய காரணத்தை எனக்குக் காண்பியுங்கள். இந்த காரியம், அந்த காரியம் என எல்லாவற்றையும் யோசிப்பதை நிறுத்துங்கள். ''நான் இதைச் செய்ய வேண்டுமா அல்லது அதைச் செய்ய வேண்டுமா'' என்றெல்லாம் யோசிப்பதை நிறுத்துங்கள். நான் உங்களிடம் ஒரே ஒரு உறுதியான காரியத்தை மட்டும் கேட்கிறேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? நீ நிச்சயமாகவே விசுவாசித்தால், நீ நித்திய ஜீவனை பெற்றிருக்கிறாய் என்பதையும் ஆகையால் அழிந்து போகமாட்டாய் என்பதையும் வேதாகமத்தை கொண்டு நிரூபித்துக்காட்டுகிறேன். 'என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு“, கிறிஸ்து இயேசுவே அந்த வார்த்தைகளை உரைத்திருக்கிறார். பெந்தெகொஸ்தே நாளிலே பேதுரு அந்த வார்த்தைகளை பேசியிருக்கிறார். இதோ சரியாக இங்கே பரிசுத்த யோவான் 5ஆம் அதிகாரத்தில் இயேசு அதை கூறியிருக்கிறார். அவர்களெல்லோரும் வேதாகமத்தினூடாய் அந்த காரியத்தை பேசியிருக்கிறார்கள். ஆனால் மனிதனோ அதை திரித்துவிட்டான். வேறு காரியங்களோடு சேர்த்து அதை என்னென்னமோ செய்யப் பார்த்தான். அதை ஸ்தாபனங்களாகவும் வேறு மற்ற காரியங்களாகவும் எழுப்ப பார்த்தான். 49சிலர், ''ஆம், அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று மட்டும் விசுவாசித்துவிட்டு உள்ளே வாருங்கள்'', என்றும் கூறியிருக்கின்றனர். அந்த பிசாசின் தந்திரத்தை உங்களால் காண முடிகிறதா? ''ஓ சகோதரனே, நாங்கள் மிகவும் பரவசமடைந்து கத்தினோம்'', என்று ஒருவர் சொன்னார். பிசாசு செய்த தந்திரம் புரிகிறதா? மற்றொருவர், ''நாங்கள் அந்நிய பாஷையில் பேசினோம். ஆகையால் அதை பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசிக்கிறோம்'', என்று கூறினார். பிசாசின் தந்திரம் புரிகிறதா? அந்த காரியங்களெல்லாம் சரிதான், ஆனாலும் அது கிறிஸ்து அல்ல. ஆம் நிச்சயமாக. 50ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முற்றிலுமாக விசுவாசிக்கும்போது, அவன் விசுவாசிக்க துவங்கும் அந்த நிமிஷமே அவன் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கிறான். அது சரிதான், நீ விசுவாசிக்கும்போது உன்னைப் பற்றி உன்னுடைய ஜீவியம் கூறும். உன்னுடைய ஜீவியம்‚ அப்பொழுது மற்றெல்லா காரியமும் நிகழும். சத்தமிடுதல், களிகூறுதல், அந்நிய பாஷையில் பேசுதல், சுகமாக்குதல் மற்றும் எல்லா வரங்களும் காரியங்களும்‚ நீ ஏதோ செய்ததினால் நடப்பதில்லை ஆனால் அவைகளெல்லாம் தேவனுடைய உண்மையான அடையாளத்தோடு உன்னை பின்தொடரும். புரிகிறதா? ஓ, 'முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்“. 51நான் இந்த விழுந்துகொண்டிருக்கும் உலகத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு தேசத்தின் மீதும் அந்த சுவற்றில் எழுதப்பட்ட காரியத்தை காண்கிறேன். மகத்தான ஆட்சியாளர்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். வரப்போகிற காரியங்களைக் குறித்து பென்டகனிலிருந்து கிடைக்கும் தகவலை நீங்கள் வாசிக்க வேண்டும். இந்த தேசத்தின் நிலைமையைக் குறித்து நீங்கள் அறிய வேண்டும். சகோதரனே நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும், நாம் நம்மை மிகவும் பெரிய தைரியசாலிகள் போல பாவனை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அடிப்படையில் நாம் மிகவும் பயந்து போய் இருக்கிறோம். அது உங்களுக்கே தெரியும். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதேபோல் நீங்கள் பயந்திருப்பதும் நியாயம்தான். ஒரே ஒரு நபர்தான் பயப்படாமல் இருப்பதற்கு உரிமை உண்டு, அது தேவனுடைய ஆவியினால் பிறந்த புருஷரும் ஸ்திரீயும் மட்டுமே. அந்தபடியே ஒரு அணுகுண்டு கூட விசுவாசிக்கு பரலோகத்திற்கு செல்வதற்கான டிக்கெட்தான். அல்லேலூயா‚ ஆம் ஐயா. மரணத்தால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. துரிதமான மரணம் துரிதமான மகிமை. அது சரியே. இந்த மாமிச அங்கியை நான் களைந்து, எழும்பி நித்திய நித்தியமான பரிசை பிடித்து, காற்றினூடாய் கடந்து செல்லும்போது, என் இனிய ஜெப நேரமே, 'விடை பெறுகிறேன், விடை பெறுகிறேன்“, என்று உரக்க சத்தமிடுவேன். 52சென்றிடுவேன்! இந்த நரைத்த முடியுள்ள பரிசுத்தவான்களைப் பொருத்தமட்டில் அணுகுண்டு ஒரு பொருட்டே இல்லை. மீண்டும் வாலிபமான ஆணும் பெண்ணுமாக மாறுதல். இவ்விடத்தை விட்டு கிட்டதட்ட எல்லோருமாய் அவ்விடம் கடந்து செல்லும் குடும்பங்களுக்கு அணுகுண்டு என்னவாக இருக்கிறது. மீண்டுமாக ஒன்றாக குடும்பமாக இருத்தல்‚ தேவனுக்கே மகிமை உண்டாவதாக‚ சகோதரனே‚ (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை தட்டுகிறார்) இதைக் காட்டிலும் மகத்துவமான ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமா? உன்னுடைய இருதயம் கல்வாரியிலே நிலைத்திருக்கிறது என்ற பரிபூரண நம்பிக்கை உண்டாயிருக்கும்போது இந்த உலகத்தின் எந்தவொரு காரியமும் உங்களை குழப்பவோ, மாற்றவோ அல்லது அசைக்கவோ முடியாது‚ நீங்களோ அந்த மீட்பின் நாளிலே அவர் முன்பாக கறைதிறையற்றவராய் நிறுத்தப்படுவதற்காக கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தேவனுடைய இராஜ்ஜியத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். அவர் உங்களுக்காக என்ன செய்கிறாரோ அதனாலேயன்றி உங்கள் கிரியைகளினால் அல்ல, 'நான் இந்த காரியத்தை விட்டு விட்டால், நான் மட்டும் அந்த காரியத்தை விட்டுவிட்டால்“, என்று நீங்கள் நடப்பித்த காரியங்கள் ஒன்றினாலும் அல்ல. நீங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் உங்கள் முழு சிந்தையோடும் விசுவாசிக்கிறீர்களா? 53பேதுரு சென்றபோது... அதாவது பிலிப்பு அந்த அண்ணகருக்கு ஞானஸ்நானம் கொடுக்க சென்ற போது, 'தண்ணீர் இங்கே இருக்கிறதே. நான் ஞானஸ்நானம் பெறுவதற்கு என்ன தடை“, என்று கேட்டார். பேதுரு... நான் பிலிப்புவைக் குறிக்கிறேன். அதற்கு பிலிப்பு, ''நீர் உம்முடைய முழு இருதயத்தோடும், உம்முடைய முழு ஆத்துமாவோடும். உம்முடைய முழு மனதோடும் விசுவாசிக்க வேண்டும்“ என்றான். அவனும், ''இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை என் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், சிந்தனையோடும் விசுவாசிக்கிறேன்'', என்றான். இரதத்தை நிறுத்தி, தண்ணீரில் இறங்கி அவனுக்கு ஞானஸ்நானத்தைக் கொடுத்தான். அதற்குமேல் அவன் பிலிப்புவை காணாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை மறைத்து கொண்டு போய்விட்டார். பின்பு அவர் அவனை வானங்களுடாய் 200 மைல்களுக்கு (Space) அழைத்துச் சென்று இறக்கிவிட்ட பின் அந்த எழுப்புதல் கூட்டம் மீண்டும் துவங்கியது. அது சரிதான். அது சரியேதான். அன்றைக்கு இருந்த அதே தேவன்தான் இன்றைக்கும் இருக்கிறார். 54நான் இப்பொழுது அந்த இரவில் கப்பலிலிருந்த பவுலை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் பத்திரமாய் இருக்க முடியும் என்ற எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று. கப்பலுக்குள்ளாக தண்ணீர் தேங்கியிருந்ததால் அது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. எல்லோரும் நம்பிக்கை இழந்திருந்தனர். பவுலோ அன்றிரவு அந்த அறையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்திருப்பான். அந்நேரம் தேவனுடைய தூதனானவர் வந்து, 'பவுலே பயப்படாதே. நீ பயப்படாதே, நான் உன்னை ராயனுக்கு முன்பாக நிற்கச் செய்வேன். நீ அங்கே சாட்சி சொல்ல வேண்டும். உன்னோடு பிரயாணிக்கும் அனைவரையும் கூட உனக்குத் தருவேன்“, என்றார். அப்பொழுது பவுல் தன்னுடைய வயதான சிறு கைகளை அசைத்தவாறு, 'அல்லேலூயா, சகோதரரே ஒரு நிமிடம் பொறுங்கள், ஒரு நிமிடம் நில்லுங்கள்“, என்று சத்தமிட்டுக் கொண்டு ஓடுவதைக் காண முடிகிறது. ஆனால் அவர்களோ, 'யாரோ ஒருவருக்கு புத்தி பேதலித்து பைத்தியம் பிடித்து விட்டது“, என்றனர். இது தான் காரியம். அங்கிருந்த இறையியல் படித்த மேதாவிகள் எல்லோரும் என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியே வந்தனர். 'திட மனதாயிருங்கள்‚ திட மனதாயிருங்கள்‚“, என்றான். 'பாவம், அவனுக்கு மூளை குழம்பிவிட்டது. பார்த்தீர்களா. அவன் நிறைய நாள் உபவாசம் இருந்தான். அவன் அதில் இருந்ததால் இப்பொழுது அவன் கதை முடியபோகிறது“, என்றனர். பவுலோ, 'ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ் சொல்லுகிறேன். ஏனென்றால் நான் சேவிக்கிறதான தேவனுடைய தூதனானவர் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று, 'பவுலே பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும். இதோ உன்னுடனே கூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார்“, என்றான். 'ஆயினும் நான் தரிசனத்தில் கண்டதுபோல கப்பலானது ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும். நான் தேவனை விசுவாசிக்கிறேன், அவர் எனக்கு என்ன காண்பித்தாரோ அப்படியே நடக்கும்”, என்றான். அதேபோல, கச்சிதமாக, வார்த்தையின்படி வார்த்தையாக, அப்படியே நிறைவேறிற்று. அது சரிதான். 55இப்பொழுது நீங்கள் இந்தவொரு சிறு காரியத்தை கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது காரியத்தின் மறுபக்கத்தின் காட்சியை நீங்கள் பார்க்கக் கூடும். கவனியுங்கள். சிலர் படகுகளை விட்டு இறக்கி ஒளிந்து ஓட நினைத்த போது, பவுல் உடனே, 'நீங்கள் இந்த படகில் இருப்பது மட்டுமே தப்பிப்பதற்கான ஒரே வழி“, என்றான். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க மேடையை பலமுறை தட்டுகிறார்) நீங்கள் நிச்சயமாக கர்த்தர் உரைத்தபடியே செய்ய வேண்டும். தேவன் தரிசனத்தை தந்திருக்கிறார். ஆனால் அதை அவர் வழியிலேயே செய்ய வேண்டும். 56சகோதரனே, இந்த குழப்பங்களிலிருந்ததெல்லாம் வெளியே வருவதற்காக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சபையின் மாதிரியை தேவன் அருளுகிறார். உங்களிடம் பெரிய நால்வர் (Big Four) அல்லது பென்டகன் (அமெரிக்காவின் இராணுவ தலைமைச் செயலகம்) அல்லது எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்; சபைகளை ஏற்படுத்தி ஊழியர்களை நியமித்து இறையியல் கல்வி முறைகளை உண்டாக்கி அவர்களுக்கு பயிற்றுவித்தாலும் மக்கள் தேவனுடைய நித்திய வழியினண்டை மீண்டுமாக வந்து பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெறுமட்டுமாக அது முழுமையடையாது. அப்பொழுது அவர்கள் முன்னோக்கிச் சென்று தங்கள் ஊழியத்தில் அற்புத அடையாளங்களோடு பிரசங்கிப்பார்கள். அதைக் காட்டிலும் வேறெந்த காரியமும் இதற்கு ஈடாகாது. தேவனிடத்தில் திட்டங்கள் இருக்கிறது, ஆனால் நீ தான் அந்த திட்டத்திற்குள்ளாக வர வேண்டும். ஓ தேவரீர், இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும். சகோதரன் நெவில் அவர்களே‚ அதை விசுவாசிக்க எங்களுக்கு உதவி செய்யும் என்பதே என்னுடைய ஜெபம். 'கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை தவிர வேறெந்த நாமத்திலும் இரட்சிப்பு இல்லை“. 57இப்பொழுதும் நாம் கிறிஸ்துமஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எல்லா இடத்திலும் அலங்காரத்திற்கு சான்டா கிளாசை பயன்படுத்துகின்றனர். இயேசுவை விட்டுவிட்டனர். எழுத்தில் கூட அதை பயன்படுத்தவில்லை. ஓ-ஆயுளு என்கின்றனர். கிறிஸ்துமஸில் கிறிஸ்து என்ற பதத்தை கூட சேர்ப்பதில்லை. மக்கள் இப்பொழுது அதன் நிஜமான காரணமாகிய கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. அவருக்குப் பதிலாக இருக்கும் சான்டா கிளாசைப் பற்றியே சிந்திக்கின்றனர். அதேபோல, தேவனுடைய ஆவியில் களிகூறுவதற்குப் பதிலாக அவர்கள் வெளியிலே சென்று குடியில் வெறித்துக் கொண்டாடுகின்றனர். புரிகிறதா? அதுதான் அதிலிருக்கும் வித்தியாசம். 58ஆகையால் காரியமென்னவென்றால், சகோதரனே, சகோதரியே, என்னால் அதை தடுத்து நிறுத்த முடியாது. தேவனுடைய வார்த்தையும் அது அப்படிதான் இருக்குமென்று குறிப்பிடுகிறது. 'மனுஷர் தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராய் இருப்பார்கள்'', அதை எப்படி உடைக்கப் போகிறீர்கள். 'தேவபக்தியின் வேஷம் தரித்திருப்பார்கள்''. எல்லோரும் சபைக்குச் செல்கின்றார்கள். ஆம் ஐயா‚ 'தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு''. கிறிஸ்தவ நண்பனே, இன்றிரவு நான் உன்னோடு இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். என் முழு இருதயத்தோடும் கூட உன்னோடு பேசுவதற்காக எனக்கு கிடைத்த சிலாக்கியத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். என் முழு இருதயமும் இந்த செய்தியினாலே சுற்றப்பட்டிருக்கிறது. சரியாக இதே இந்தியானாவிலுள்ள ஜெபர்சன்விலில் இருக்கும் இந்த சிறிய கூடாரத்தில் என்றைக்கு அவருடைய குமாரனாம் இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேனோ, எந்த நாளில் தேவன் பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பினாரோ, அன்றிலிருந்து இப்படித்தான் இருக்கிறது. அன்றிரவு தேவன் என்மீது இறங்கினார். அந்த அறையினூடாய் ஓர் வெளிச்சத்தை வீசினார். அதைப் பார்த்ததும் மிகவும் நடுக்கமுற்றதால் என்னால் நகரக் கூட முடியவில்லை. அந்த ஒஹாயே, அவென்யூயில் (Avenue) நான் ஒரு சிறு புல்லினால் ஆன சாக்குதுணியின் மீது முழங்காற்படியிட்டேன். அந்த வெளிச்சமானது ஒரு சிலுவை வடிவில் மாறினது. அதிலிருந்து ஏதோ ஒன்று என்னிடம் பேசினது. அன்றிரவிலிருந்து என்னுடைய நம்பிக்கையானது தேவனுடைய வார்த்தையின் மேலாகவும் இயேசு கிறிஸ்துவின் நீதியின் மேலேயுமே கட்டப்பட்டிருக்கிறது. அதையே என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். எது வந்தாலும் என்னவானாலும் என்னுடைய நம்பிக்கை அதின்மேலேயே நங்கூரமிட்டிருக்கிறது. இப்பொழுதும் இன்றிரவிலே ஒரே காரியத்தை விசுவாசித்து, அதே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட இது போன்ற கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறறேன். ஆண்டுகளினூடாகவும், ஆபத்துக்களும், கஷ்டங்கள் மற்றும் பல கண்ணிகள் ஊடாகவும், நான் ஏற்கனவே வந்துவிட்டேன்; அது என்னை வயதானவனாக்கி, என்னை உடைத்து என் தோலையும் உரித்துப் போட்டது. ஆனாலும் கிருபையோ என்னை இம்மட்டுமாக அழைத்து வந்தது, கிருபையே இன்னுமாக அழைத்துச் செல்லும். அப்பொழுது அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் சென்றாலும் சூரியனைப் போலவே பிரகாசமாய், தேவனை துதிப்பதற்கான நாட்கள் குறைவுபட்டிருக்கவே இருக்காது. 59தானியேலோ அதை குறித்ததான தரிசனத்தைப் பார்த்து, 'துன்மார்க்கர் கடைசி நாட்களில் துன்மார்க்கத்தை நடப்பித்தாலும், தங்கள் தேவனை அறிந்தவர்களோ கடைசி நாட்களில் பெருங்காரியங்களைச் செய்வார்கள்'', என்றான். இது இந்த காலத்தை குறித்து பேசப்படுகிறது. ''பெருங்காரியங்கள்'' என்றால் என்ன என்று அறிந்திருக்கிறீர்களா? விசுவாசத்தின் பெருங்காரியமானது அற்புதங்களையும் அடையாளங்களையும் பிறப்பிக்கும். ''ஆனாலும் துன்மார்க்கர் தங்கள் துன்மார்க்கத்தை தொடருவார்கள்'', 'அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம். ஆனாலும் தானியேலே அந்த புஸ்தகத்திற்கு முத்திரை போடு, நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்திர வீதத்திற்கு எழுந்திருப்பாய். ஞானவான்கள் அநேகர் கிறிஸ்துவிடம் திரும்புவார்கள். அவர்கள் வானத்தின் நட்சத்திரங்களைப் போல என்றென்றைக்கும் பிரகாசிப்பார்கள்'', என்றார். 60நாற்பது ஆண்டு காலம் என்னை துண்டு துண்டாய் உடைத்துப்போட்டது. ஒருவேளை எண்பது ஆண்டு காலம் உங்களை துண்டு துண்டாய் உடைத்துப் போட்டிருக்கலாம். அல்லது ஒரு சொடக்கிடும் நேரத்தில் முப்பது வருடமானது உங்களை முற்றிலும் வேறுப்பட்ட மனிதனாக மாற்றியிருக்கலாம். (சகோதரன் பிரான்ஹாம் ஒரு முறை சொடக்கு போடுகிறார்) ஆனாலும் அந்த காலை பொழுதிலே உதித்திடும் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தை எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? அவள் அந்த வானத்திலே ஜொலித்துக் கொண்டே உரக்க சத்தமிட்டு களிகூறுகிறதை காண எப்பொழுதாவது அதிகாலமே எழும்பியிருக்கிறீர்களா? அவளுடைய அழகு ஒரு துளிகூட குறையவில்லை. தேவன் தாமே அதை அதனுடைய வட்டப் பாதையில் தொங்க வைத்தார். அன்றைக்கு அது எப்படி பிரகாசமாகவும் மிக அழகாகவும் இருந்ததோ அதேபோலவே இன்றைக்கும் இருக்கிறது. அது கொஞ்சம் கூட தன்னுடைய நேரத்தை இழக்கவில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளினூடாய் ஆயிரமாயிரம் முறைகள் தோன்றியிருந்தாலும் அது தன்னுடைய அழகை கொஞ்சம் கூட இழக்கவில்லை. அந்தபடியே, ''அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைக் காட்டிலும் என்றென்றெக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்'', என்று வேதாகமம் கூறுகிறது. அல்லேலூயா‚ சகோதரனே‚ பிரசங்கியாக இருப்பது எவ்வளவு நன்மையானதாக இருக்கிறது அல்லவா? (சபையோர் ''ஆமென்'' என்கிறார்கள்) ஆம், நிச்சயமாக ஒரு கிறிஸ்தவனாக இருப்பது நல்லது. 61இது ஒரு கடினமான காலமாய் இருக்கலாம். தேவன் நமக்கு இலகுவான பூ மஞ்சத்தை வாக்களிக்கவில்லை, ஆனாலும் உங்களை தாக்கக் கூடிய ஒவ்வொரு சோதனையின் போதும் போதிய கிருபையை வாக்களித்திருக்கிறார். அது சரிதான். ஆம் நிச்சயமாக கிருபையே போதுமானது. ஆகையால் அவர் பூக்களையோ அல்லது பூக்களிலான மஞ்சத்தையோ வாக்களிக்கவில்லை ஆனாலும் ஒவ்வொரு சோதனையை மேற்கொள்வதற்கான கிருபையையே வாக்களித்திருக்கிறார். சிலுவை அதிக சுமையாகும் வேளையில் கிறிஸ்து உங்களுடனே கூட இருப்பார் என்றே வாக்குதத்தம் செய்திருக்கிறார். ஆம், ஐயா‚ இவையெல்லாம் முடிவடையும் ஒரு மகிமையான நாளிலே நாம் அவரை சமாதானத்துடனே சந்திப்போம். நீங்கள் ஒவ்வொருவரும் அதே காரியத்தை பெற்றுக்கொள்ள தேவன் அருள் புரிவாராக. 62இன்றிரவு யாரேனும் அவிசுவாசி இங்கிருப்பீர்களானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கும் அந்த நொடியே தேவன் உங்களைக் குறித்து சாட்சியிடுவார். உன்னை தம்முடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக நித்தியத்திற்கும் முத்திரையிடுவார். இப்பொழுது ஏதாவது ஒரு காரியம் உங்கள் இருதயத்தை தட்டிக் கொண்டிருக்குமானால், 'அதை உணர்ந்து பெற்ற பின்பு அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுதலிக்கும்போது ஆம் கர்த்தராகிய இயேசுவே“ என்று கூறுமட்டுமாக நீங்கள் பரிதபிக்கப்பட்ட புருஷரும் ஸ்திரியுமாகவே இருப்பீர்கள். இந்த வருகின்ற வாரம் கிறிஸ்துமஸ் நேரமாய் இருக்கிறது. எல்லோரும் களிகூர்ந்து ஒருவருக்காக ஒருவர் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நீங்களோவென்றால் அந்த வயதான சிமியோன் போல இருங்கள். அவன் அந்த கிறிஸ்துமஸ் நாளிகையிலே தேவாலயத்தினூடாய் நடந்து சென்று தம்முடைய பலமுள்ள கரங்களினால் இரட்சகரை தூக்கியெடுத்து, அரவணைத்து, 'தேவரீர் உம்முடைய வார்த்தையின்படி அடியேனை சமாதானத்தோடு கடந்து செல்ல அனுமதியும். என்னுடைய கண்கள் உம்முடைய இரட்சிப்பை கண்டது'', என்றான். இந்த கிறிஸ்துமஸின் போது பரிசுகளை பரிமாற்றுவதையோ சான்டா கிளாசையோ அரவணைக்காதீர்கள். ஆனாலும் நீங்களோ உங்கள் விசுவாச கரங்களை விரித்து பல ஆண்டுகளுக்கு முன்பதாக சிமியோன் பிடித்த அதே கிறிஸ்துவை அரவணைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு நித்திய ஜீவனை அளித்திடுவார். ஆகையால் உங்களுக்குள்ளாக தேவனுடைய ஜீவன் இருப்பதினால் நீங்கள் அழிந்துபோக முடியாது. 63அதற்கான வார்த்தை என்னவென்று அறிந்திருக்கிறீர்களா? கிரேக்க பதத்தை தேடாதீர்கள். ஏனென்றால் அது கிரேக்கத்திலேயே சம்பாஷனை செய்கின்ற மக்களுக்கு அவசியப்படுகிறது. நாங்கள் இந்த கூடாரத்தில் கிரேக்க காரியங்களை குறித்து பேசுவதில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவை குறித்து பேசுகிறோம். அதி மேதாவித்தனமான வார்த்தைகளெல்லாம் நாங்கள் பயன்படுத்துவதில்லை. கிறிஸ்துவின் உயிர்த்தெழும்பும் வல்லைமையை தவிர வேறெந்த காரியத்தைப் பற்றியும் அறிந்தவர்களாய் நாங்கள் இங்கு வரவில்லை. ஆகிலும் மொழியாக்கம் செய்திடும்போது அதே கிரேக்க வார்த்தைக்கு 'நித்திய ஜீவன்“, என்று பொருள் வருகிறது. நான் அதை கிரேக்கம் மற்றும் எபிரேய மொழியிலேயும் எடுத்து படித்தேன். நான் ஒன்றும் அதில் ஞானியல்ல; ஆனாலும் சில வார்த்தைகளை மட்டும் அறிந்திருக்கிறேன். இவைகளெல்லாம் யாரேனும் தர்க்கம் செய்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு தக்க பதில் கொடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாயிருக்கிறது. இப்பொழுது தேவனுடைய ஜீவனைப் பற்றி எந்த வார்த்தை குறிக்கிறதோ அதே வார்த்தைதான் தேவன் உங்களுக்களிக்கும் ஜீவனையும் பற்றி குறிக்கிறது. தேவனுடைய ஜீவன் மற்றும் நித்திய ஜீவன் ஆகிய இரண்டிற்கும் (ணுழுநு) 'ஸோஈ” என்ற ஒரே கிரேக்க வார்த்தைதான். 'என்னிடத்தில் வருகிற யாவருக்கும் என்னுடைய சொந்த ஜீவனாகிய (ZOE) ஸோஈ அளிப்பேன். நான் அவர்களுக்கு என் சொந்த ஜீவனையே அளிப்பதால் அவர்கள் அழிந்து போவதில்லை. அவர்களையோ கடைசி நாட்களிலே எழுப்புவேன்''. இல்லையென்றால், ''நான் என்னிடத்தில் வருகின்ற யாவரையும் எனக்குள்ளாக சுற்றிக் கொள்வேன்'', என்றும் கூறலாம். ஆமென். ''அவன் எனக்குள்ளாக ஒரு பாகமாகவே ஆவான். நான் மரிக்க முடியாதது போல அவனும் மரிக்கவே போவதில்லை. நான் அழியாமையுள்ளதால் மரிக்க முடியாதது போல அவனுடைய ஆத்துமாவும் அழியாமையுள்ளதால் மரிப்பதேயில்லை. நான் அவனை நிச்சயமாக கடைசி நாளில் மீண்டுமாக உயிர்தெழும்பச் செய்வேன்'', ஓ என்னே‚ 64அப்பொழுது மீண்டுமாக அந்த பழைய சோதனைகள் கடினமானாலும்;, அந்த சமயத்தில், ''எனக்குள்ளாக வாசம் செய்கிறவர் தேவனுடைய ஆவியானவர். இங்கிருப்பதிலே அவரைத் தவிர நன்மையான காரியம் என்று ஒன்றுமே இல்லை. நானோ என்னுடையவனல்ல நான் அவருடையவன். உலகத்திலுள்ள காரியங்களைக் காணாமல் அவரையே நோக்கிப் பார்க்கிறேன்;. ஏனென்றால் என்னுடைய நம்பிக்கை அவர் மேலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒரு நாளிலே நான் வாஞ்சித்தப்படியே நிச்சயமாகவே அவரைக் காண்பேன். நான் ஜீவிப்பதே மக்களை அவரண்டை சேர்ப்பதற்காகத்தான்“, அப்பொழுது, நான் உங்களுக்கு சொல்கிறேன், அந்த பழைய கட்டுகள் எல்லாம் விழத் துவங்கும், நீங்கள் மீண்டும் புதிதானவர்களாய் நடக்கத் துவங்குவீர்கள். 65கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுதும் நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்கள் என நான் நம்புகிறேன். நாம் ஜெபிப்போம். பரலோகப் பிதாவே, இன்றிரவிலே உம்முடைய நீதியுள்ள குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்று இதே கட்டிடத்திற்கு பரிசுத்த ஆவியானவர் வந்ததற்காகவும் இப்பொழுதும் இங்கிருப்பதற்காகவும் இன்றிரவிலே உமக்கு நன்றி செலுத்துகிறேன். தவற முடியாததும், விழுந்துபோக முடியாததுமான தேவனுடைய வார்த்தையின்படியாக இயேசு கிறிஸ்துவை கல்லறையிலிருந்து எந்த ஆவி எழுப்பினதோ அதே ஆவியானவரே இப்பொழுது நம் மத்தியில் இருக்கிறார். தேவரீர், இன்றிரவிலே இங்கிருக்கும் உம்மையறியாத பிள்ளைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வார்களாக. அவர்களுக்கு இந்த மணி நேரத்திலேயே நித்திய ஜீவனை விசுவாசிக்கும் விசுவாசத்தை அளித்திடுவீராக. பிணியாளிகளையும், சுகவீனமானோரையும் சுகப்படுத்துவீராக. இழப்பால் தவிக்கும் குடும்பத்தினரை தேவரீர் நினைவுகூர்ந்திடும். ஓ தேவனே அந்த சவப்பெட்டியைச் சுற்றி நிற்கும் இரட்சிக்கப்படாத புருஷரிடமும் ஸ்திரீகளிடமும் நூற்றுக்கணக்கான முறை, பல நூற்றுக்கணக்கான முறை பிரசங்கித்தாயிற்று என அறிந்த பிறகும் என்ன சொல்ல முடியும். ஓ பிதாவே‚ இன்றிரவு புருஷரும் ஸ்திரீகளும் ஒரு தரிசனத்தைப் பெற்று தாங்கள் அழிவுக்குட்பட்டவர்கள் என்பதை உணரச் செய்திடும். இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நாங்கள் செய்தவற்றை கணக்கு ஒப்புவிப்பதற்காக எந்த நேரத்திலே அக்கரைக்கு அழைக்கப்பட்டு நியாயதீர்ப்பில் நின்று பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் அறியோம். அப்பொழுது வழக்கும் முடிவடையும், புத்தகமும் மூடப்படும். அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. அவரை நியாயந்தீர்ப்பதினால் நாமும் நியாயந்தீர்க்கப்படுகிறோம். தகப்பனே, ஓ, இன்றிரவிலே என்னுடைய இருதயத்தை ஆராய்ந்து பாரும். 'என்னை ஆராய்ந்து பாரும், என்னை சோதித்துப் பாரும்“ என்று தாவீது கூறினான். தாவீது மட்டுமல்ல நானும் அதே காரியத்தைதான் கூறுகிறேன். பொல்லாங்கான வழி ஏதேனும் என்னில் இருந்தால் தேவரீர் அதை எடுத்துபோடும். அதை எனக்குள்ளாக இருக்க அனுமதிக்காதேயும். பிதாவே‚ அது எனக்கு வேண்டாம். தேவரீர் அது எனக்கு வேண்டவே வேண்டாம். அது என்னை விட்டகன்று போகட்டும். நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை, ஆனாலும் பிதாவே, இன்றிரவு நான் பிரசங்கித்ததை கேட்ட இங்கிருக்கும் எல்லா மக்களுக்காகவும் கேட்கிறேன். இம்மக்களுக்குள்ளாக ஏதேனும் பாவமோ அல்லது துன்மார்க்கமோ இருக்க நேரிடுமானால் தேவரீர் நீர் அதை அகற்றிப் போட வேண்டும். அவைகளெல்லாம் உம்முடைய பிள்ளைகளிடம் காணப்பட அனுமதிக்காதேயும். தேவரீர் அதை தூரப்படுத்தும். அவர்கள் ஒவ்வொரு சோதனையையும் மேற்கொள்வதற்கான கிருபையை அளித்திடும். தேவனுடைய வித்தானது மக்களுடைய இருதயத்தில் வேறூண்றி நித்திய ஜீவனை பிறப்பிக்கட்டும். இந்த ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம். ஆமென். ஓ, நான் அவரை கண்டு அவர் முகத்தை பார்க்க விரும்புகிறேன் அங்கே அவருடைய இரட்சிப்பின் கிருபையை என்றென்றுமாய் பாடுவேன்; அந்த கிருபையின் வீதியிலே என் சத்தத்தை உயர்த்தட்டும்; எல்லா கவலையையும் கடந்து, என்றென்றும் மகிழ்ச்சியோடிருக்க என் வீட்டை அடைவேன். இந்த தேசத்தையோ கடப்பேன், பாடல் பாடி நடந்து, ஆத்துமாவை கல்வாரியண்டை திருப்பி, ஊற்றும் உதிரம் காண்பித்து, ஓ உள்ளும் புறமும் பல அம்புகள் தைத்து. ஆனாலும் என் தேவன் நீர், என்னை உம்மண்டை சேர்க்கிறீர், நான் வெற்றியடைய வேண்டும். ஓ, நான் அவரைக் கண்டு அவர் முகத்தைப் பார்க்க விரும்புகிறேன் அங்கே அவருடைய இரட்சிப்பின் கிருபையை என்றென்றுமாய் பாடுவேன்; அந்த கிருபையின் வீதியிலே என் சத்தத்தை உயர்த்தட்டும்; எல்லா கவலையையும் கடந்து, என்றென்றும் மகிழ்ச்சியோடிருக்க என் வீட்டை அடைவேன். 66ஓ, இன்றொரு நாளிலே நான் பாட விரும்புகிறேன். தேவன் வருகின்ற நாட்கள் ஒன்றிலே பாடுவதற்கு அனுமதிப்பார் என்று விசுவாசிக்கிறேன். அந்த நதியை தாண்டி அக்கரைக்கு நான் கடந்து செல்லும்போது, அது சரிதான். ஒரு வேளை இங்கே அது நடக்காமல் போகலாம். நான் பாடகன் அல்ல. ஆனால் நான் என்ன பாட்டு பாட போகிறேன் என்று தெரியுமா? என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் நடுவில் ஒன்றுமில்லையே, இந்த உலகத்தின் மாயையான கனவுகளும் அல்ல எல்லா பாவ சுகங்களையும் களைந்து விட்டேன், இயேசு என்னுடையவர், நடுவில் வேறு ஒன்றுமில்லையே. (ஓ ஆண்டவரே!) என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் நடுவில் ஒன்றுமில்லையே இந்த உலகத்தின் மாயையான கனவுகளும் அல்ல எல்லா பாவ சுகங்களையும் களைந்துவிட்டேன், இயேசு என்னுடையவர், நடுவில் வேறு ஒன்றுமில்லையே. இன்றிரவு எத்தனைப் பேரால் தங்கள் கரத்தை சாட்சியாக உயர்த்தி இந்த பாடலை பாட முடியும்? என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் நடுவில் ஒன்றுமில்லையே இந்த உலகத்தின் மாயையான கனவுகளும் அல்ல எல்லா பாவ சுகங்களையும் களைந்துவிட்டேன், இயேசு என்னுடையவர், நடுவில் வேறு ஒன்றுமில்லையே. 67இந்த காரியம் நமக்கு சந்தோஷத்தை தருகிறதல்லவா? 'என் வசனத்தை கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினை தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்''. இதோ இன்றிரவும் நாம் நம்முடைய கரங்களை உயர்த்தினவாறு பாடிக் கொண்டிருக்கிறோம். 'எல்லா பாவ சுகங்களையும் நான் களைந்துவிட்டேன். இயேசு என்னுடையவர், முற்றிலுமாக, என் வேலையோ, என் நண்பர்களோ, நான் நேசிப்பவரோ, என் இனத்தாரோ, என் மனைவியோ அல்லது என் பிள்ளைகளோ, எதுவுமே என் ஆத்துமாவுக்கும் என் இரட்சகருக்கும் மத்தியில் வர முடியாது. மீதம் எல்லாமே இரண்டாம் பட்சம் தான்'', இது நிச்சயமாகவே அருமையாக இருக்கிறதல்லவா? 68இன்றொரு காலை வேளையிலே யாரோ ஒருவர் அந்த நதியைக் கடந்து, ''ஆச்சரியமான கிருபை, அது எவ்வளவு இனிமையான சத்தம்'', என பாடக் கேட்பீர்கள். அங்கு சென்று மீண்டுமாக வாலிப புருஷரும் ஸ்திரீகளுமாக மாறிடுவோம், வாலிபமான உற்றார் உறவினரை அங்கே சந்திப்போம். நீங்கள் நேசித்த தாயாரையும் தகப்பனாரையும் பார்த்து, 'ஓ அம்மா, உங்களை மீண்டுமாக சந்திப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அங்கே பாருங்கள், சகோதரன் ஜான் வருகிறான். இதோ சகோதரன் ஜோ. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது'', என்று கூறி அவர்கள் கைகளை குலுக்குவேன். அப்பொழுது அங்கே ஓர் குன்றினை தாண்டி எங்கிருந்தோ 'ஆச்சரியமான கிருபை, அதன் நாதம் என்ன இனிமை, அது என்னைப் போன்ற இழிவானவனையும் இரட்சித்ததே“, என்று யாரோ ஒருவர் பாட கேட்பீர்கள். அப்பொழுது ஓடிப்போய் அந்த குன்றின் மேலே ஏறிச் சென்று பார்த்தால் ஒரு சிறிய குடிசையை காண்பீர்கள். அங்கே சகோதரன் பிரான்ஹாம் நின்றுக் கொண்டு, ''ஆச்சரியமான கிருபை”, என்ற பாடலை பாடிக் கொண்டிருப்பதை காண்பீர்கள். நீங்கள் அதை பார்த்தவுடன், ''தேவனுக்கே மகிமையுண்டாவதாக'', அவர் வீட்டிற்கு வந்தடைந்துவிட்டார். இதோ, ''ஆச்சரியமான கிருபை'', என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கிறாரே. ஓ, என்னே‚ ஆச்சரியமான கிருபை அதன் நாதம் என்ன இனிமை, அது என்னைப் போன்ற இழிவானவனையும் இரட்சித்ததே‚ ஒருவிசை காணாமல் போனேன், இப்பொழுதோ கண்டடையப்பட்டேன்‚ குருடனாயிருந்தேன், இப்பொழுதோ... (டேப்பில் வெற்றிடம்) காண்கிறேன். 69கிருபையினாலே, உலகம் உருவாவதற்கு முன்னதாகவே, தேவன் தம்முடைய தூதர்களை நோக்கி, 'வில்லியம் பிரான்ஹாம் என்றொருவர் எனக்காக சுவிசேஷத்தை பிரசங்கிப்பார்'', என்றார். கிருபைதான் பயப்படுதலை என் இருதயத்திற்கு கற்றுக்கொடுத்தது‚ கிருபையினாலேயே பயத்தினின்று மீண்டேன்;‚ ஓ, எவ்வளவு விலையேறப்பெற்றது அந்த கிருபை‚ நான் விசுவாசித்த (இப்பொழுது என்ன தடை?) ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், அவரே என்னை முதலாய் நேசித்ததால். நான் அவரை விடேன், நான் அவரை விடேன், நான் அவரை விடேன், அவரே என்னை முதலாய் நேசித்ததால். எனக்கோர் தகப்பன் உண்டு, எனக்கோர் தகப்பன் உண்டு, எனக்கோர் தகப்பன் உண்டு, அக்கரையினிலே. ஓ, ஓர் பிரகாச நாளில் சந்திப்பேன், ஓர் பிரகாச நாளில் சந்திப்பேன், ஓர் பிரகாச நாளில் சந்திப்பேன், அக்கரையினிலே. 70அது அருமையாக இருக்கிறது அல்லவா? (சபையார் 'ஆமென்“ என்கின்றனர்) எனக்கு 'என் அப்பாவை” பிடிக்கும். என் அப்பா செல்வந்தர், வீடும் மனைகளுடன், உலகத்தின் செல்வத்தை தன் கைகளில் வைத்திருக்கிறார். வைரமும் வைடூரியமும், வெள்ளியும் பொன்னும், சொல்லொன்னா செல்வம் நிறைந்த பெட்டியும் உண்டே அவரிடம்‚ நான் ராஜாவின் பிள்ளை நான் ராஜாவின் பிள்ளை இயேசு என் ரட்சகர் ஆனதால்‚ நான் ராஜாவின் பிள்ளை‚ கூடாரமோ கொட்டகையோ, எனக்கு ஏன் கவலை? அங்கே எனக்காக கட்டுகின்றார்கள் ஒரு மாளிகை! நாடு கடத்தப்பட்டாலும், இன்னும் நான் பாடுவேன்: ஓ, தேவனுக்கு மகிமை, நான் ராஜாவின் பிள்ளை‚ நான் ராஜாவின் பிள்ளை நான் ராஜாவின் பிள்ளை இயேசு என் ரட்சகர் ஆனதால், நான் ராஜாவின் பிள்ளை‚ 71எங்கள் பரலோகப் பிதாவே, பல ஆண்டுகளுக்கு முன்பதாக, கடந்து சென்றதான சகோதரர்கள் தரிசனங்கள் பெற்று பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்ட இந்த பழைய பாடல்களை கேட்கும் போது எங்கள் இருதயம் அவ்வளவாய் உருகுகிறது. நாங்கள் அவற்றையெல்லாம் நேசிக்கிறோம். நாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அவைதான் எங்களுக்கு பலத்த அஸ்திபாரமாய் இருந்தது. தேவரீர் நிச்சயமாய் இந்த இரவின் பொழுதிலே எங்கள் பாவங்கள் எல்லாம் எங்களை விட்டு விலக்கப்படும்படி அருள்வீராக. இந்த கிறிஸ்துமஸ் நேரத்தை நாங்கள் நெருங்கும் பொழுதினிலே தேவரீர் நீர் எங்கள் பாவத்தையும், நோய்களையும் அகற்றிப் போடுவீராக. எங்குமிருக்கிற தேவையுள்ளோரை இன்றிரவிலே ஆசீர்வதிப்பீராக. இதை நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே கேட்டுக்கொள்கிறோம். 72இப்பொழுதும், பலிபீடத்தண்டை வந்து அபிஷேகம் பெற்று ஜெபிப்பதற்காக சில மக்கள் இருக்கிறீர்கள். ''இராஜாவின் பிள்ளை'', என்ற இந்த பாட்டை மீண்டுமாக நாங்கள் மெல்ல ரீங்காரமிடும் பொழுது நீங்கள் வரலாம். புரிகிறதா? நீங்கள் அந்த பக்கமாக நிற்பீர்களானால்...